PulseNews
அரசியல்

சட்டசபையில் வெடித்த சினிமா பாணி அரசியல்! உதயநிதி ஸ்டாலின் பேச்சிக்கு மரண மாஸ் பதிலடி கொடுத்த அமைச்சர் வன்னி அரசு! அனல் பறந்த விவாதம்..!!!

தமிழக சட்டப்பேரவையில் திரைப்படங்களின் கிளைமாக்ஸ் காட்சியை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் வன்னி அரசுக்கும் இடையே சுவாரசியமான விவாதம் நடைபெற்றது. அரசின் செயல்பாடுகளை விமர்சித்த உதயநிதி, சினிமா பாணியில் ஆளும் தரப்புக்கு பதிலடி கொடுத்தார். அதற்கு அமைச்சர் வன்னி அரசும் அதே பாணியில் பதில் அளித்தது அவையில் கவனம் பெற்றது. ‘படம் நன்றாக இருந்தால் க்ளைமாக்ஸ் வரை பார்ப்பார்கள்’ சட்டப்பேரவை விவாதத்தின்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் மக்கள் பொறுமையாக இருந்து கடைசி வரை அதன் க்ளைமாக்ஸை பார்ப்பார்கள் என குறிப்பிட்டார். இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... சட்டப்பேரவையில் திமுக திடீர் வெளிநடப்பு...! எ.வ. வேலு அறிவிப்பால் பரபரப்பு!!! ஆனால், ஆளும் தரப்பு முன்வைக்கும் கருத்துகளைப் பார்த்தால், “இந்த படம் ஓடாது, நன்றாக இருக்காது. அதனால் முன்கூட்டியே க்ளைமாக்ஸ் வைத்துவிடுவோம்” என்று கூறுவது போல இருப்பதாக அவர் விமர்சித்தார். அவரது இந்த கருத்தால் அவையில் அரசியல் விவாதம் சூடுபிடித்தது. ‘இப்போதெல்லாம் படத்திற்கு இரண்டு க்ளைமாக்ஸ்’ உதயநிதியின் விமர்சனத்துக்கு பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, நவீன திரைப்படங்களின் மாற்றத்தை சுட்டிக்காட்டி பேசினார். இப்போதெல்லாம் சில படங்களில் இரண்டு க்ளைமாக்ஸ் இருப்பதாகவும், ஒன்று படத்தின் தொடக்கத்திலும் மற்றொன்று இறுதியிலும் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து, “மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை” என உதயநிதி ஸ்டாலினை நோக்கி வன்னி அரசு பதிலடி கொடுத்தார். சட்டப்பேரவையில் சினிமா பாணி அரசியல் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ‘க்ளைமாக்ஸ்’ என்ற சொல்லை மையமாக வைத்து இரு தரப்பினரும் அரசியல் விமர்சனங்களை முன்வைத்தது சட்டப்பேரவையில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் - வன்னி அரசு விவாதம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகின்றன. இதையும் படிங்க: சட்டப்பேரவையில் வெடித்த ரூ. 900 கோடி விவாதம்! உங்க மாமனார் தான் கொடுத்தாரு... அவர்ட்ட கேளுங்க அமைச்சர்! அடுத்த 24 மணி நேரத்தில் பாய்ந்த ED சோதனை...!!!

Tamil Spark13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சட்டசபையில் வெடித்த சினிமா பாணி அரசியல்! உதயநிதி ஸ்டாலின் பேச்சிக்கு மரண மாஸ் பதிலடி கொடுத்த அமைச்சர் வன்னி அரசு! அனல் பறந்த விவாதம்..!!!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையில் திரைப்படங்களின் இறுதிக்காட்சியை அடிப்படையாகக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் வன்னி அரசுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அரசின் செயல்பாடுகளை விமர்சித்த உதயநிதி, ஒரு திரைப்படம் சிறப்பாக இருந்தால் மட்டுமே மக்கள் அதன் இறுதிவரை பார்ப்பார்கள் என்று சினிமா பாணியில் கருத்து தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அதே சினிமா பாணியைப் பயன்படுத்தி அமைச்சர் வன்னி அரசு விவாதத்தை முன்னெடுத்தார். இருவருக்கும் இடையே நடைபெற்ற இந்த விவாதம் அவையில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics