PulseNews
அரசியல்

விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி? ரஜினியிடம் கேட்ட செய்தியாளர்கள்.. “தேங்க் யூ” சொல்லி நழுவிய ரஜினிகாந்த்!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ஆட்சி குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் தவெக தரப்பு 100 நாள் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தனது படங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது, “ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது ‘தர்மன்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். நானும் கமல்ஹாசனும் ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் படத்தில் இணைந்து நடிக்க உள்ளோம்” என்று தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்கள், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், “முதல்வர் விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினர். ஆனால், அரசியல் தொடர்பான அந்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளிக்கவில்லை. மாறாக, “தேங்க் யூ... தேங்க் யூ...” என்று கூறிவிட்டு தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதேபோல், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்ததும் பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்தது. இதற்கு விளக்கம் அளித்த ரஜினிகாந்த், விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துவிட்டதாகவும், தான் அரசியலில் இருந்து விலகிவிட்ட நிலையில் விஜய் மீது தனக்கு பொறாமை ஏற்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் விஜய்யின் ஆட்சி குறித்து நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டபோதும், ரஜினிகாந்த் அதற்கு பதிலளிக்காமல் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. விஜய்யின் 100 நாள் ஆட்சிக்கு ஆதரவா, எதிர்ப்பா என எந்த கருத்தையும் தெரிவிக்காமல் ரஜினி மவுனம் காத்திருப்பது அவரது அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி? ரஜினியிடம் கேட்ட செய்தியாளர்கள்.. “தேங்க் யூ” சொல்லி நழுவிய ரஜினிகாந்த்!
PulseNews சுருக்கம்

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று ஆகஸ்ட் 17-ஆம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. அவரது ஆட்சி குறித்து ஆளும் கட்சியினர் சாதனைகளை பட்டியலிட்டு வரும் சூழலில், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல், "தேங்க் யூ" என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்றார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics