யாழ். சிறைச்சாலைக்கு சென்ற நீதி அமைச்சர் - பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை நேரில் கண்காணிப்பதற்காக கள விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட படை மற்றும் காவல்துறை அதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரை...

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமைகளையும் அதன் செயல்பாடுகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
சிறைச்சாலைகளில் கடந்த காலங்களில் நிலவிய பல்வேறு சிக்கல்களை கருத்தில் கொண்டு, மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் படைத்தளபதிகள், காவல்துறையினர் மற்றும் துறைசார் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றின் மேற்பார்வையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.