பா.ஜ.க.வை விட்டு வி.சி.க மீது அதிக கவனம் செலுத்துவது ஏன்? தி.மு.க.வுக்கு வன்னி அரசு கேள்வி
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற மிலாடி நபி விழாவில் பேசிய சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, தி.மு.க. இன்று பா.ஜ.க.வை விமர்சிப்பதை விடவும், வி.சி.க மீது அதிகளவில் கவனம் செலுத்துகிறது என்று கூறியுள்ளார். சென்னை கவிக்கோ மன்றத்தில் சீர்மை பதிப்பகம் ஒருங்கிணைத்த 1501வது மீலாதுந் நபி விழா இன்று (30.08.26) மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறுபன்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர், இந்த விழவில் பேசிய அமைச்சர் ஷாஜகான், மத அடையாளங்களை முன்னிறுத்தி சமூகங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த கூடாது. அனைத்து சமூக மக்களுடனும், அன்புடனும் சகோதரத்துவத்துடனும் பழக வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த காலங்களில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. கிருபானந்த வாரியார், முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், இஸ்லாம் மற்றும் முஸ்லீம் சமூகத்தின் உணர்வுகளை புரிந்துகொண்டு பேசினர். அதேபோல் முஸ்லீம் சமூகத்தினரும் பிற சமூகங்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் அனைத்து சமூகங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மிலாடி நபி விழாவில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேசியுள்ளார். சென்னை கவிக்கோ மன்றத்தில் சீர்மை பதிப்பகம் ஒருங்கிணைத்த 1501வது மீலாதுந் நபி விழாவில் இன்று (30.08.26) மாலை பங்கேற்று உரையாற்றினோம். pic.twitter.com/87ST4YH6Gj — வன்னி அரசு (@VanniTamizhVCK) August 30, 2026 இதனைத் தொடர்ந்து பேசிய சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இன்றைக்கு தி.மு.க. தோழர்களும், ஆதரவாளர்களும், பா.ஜ.க.வை விமர்சிப்பதை விட, பா.ஜ.க.வின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவதை விட, விடுதலை சிறுத்தைகள் மீது அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்று நான் பார்க்கிறேன். விடுதலை சிறுத்தைகள் என்ன செய்கிறது? யார் என்ன செய்கிறார்கள், தலைவர் என்ன பேசுகிறார்? எந்த பிரச்னையில் யார் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து பதிவு செய்துகொண்டிருக்கிறது. அதே சமயம் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நாங்கள், அமைச்சராக வந்தபிறகு இந்த ஒருநாளில் என்னென்ன பணிகள் செய்திருக்கிறோம்? என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்? என்பதை சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதை விட்டுவிட்டு, பா.ஜ.க என்ன செய்கிறது? ஆர்.எஸ்.எஸ். என்ன செய்கிறது? என்று மட்டும் பார்த்துக்கொண்டிருப்பது எதற்காக? நம்முடைய நோக்கம் என்ன? நாம் எதை நோக்கி பயணிக்கிறோம்? பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து மட்டும் விமர்சனம் செய்வது எங்கள் முழுநேர அரசியல் அல்ல, அந்த அமைப்புகளின் செயல்பாடுகள், மக்களையும், அரசியலையும், சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்ப்பது தான் முக்கியம். அந்த பின்னணியில் தான் நாங்கள் ஒவ்வொரு விஷயத்தையுமு் அணுகுகிறோம். மக்கள் உரிமை, சமத்துவம், சமூகநீதி, ஜனநாயகம் இந்த அடிப்படையில் தான் நம்முடைய அரசியல் பயணம் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற 1501-வது மீலாதுன் நபி விழாவில் கலந்துகொண்ட சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, தி.மு.க.வின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க.வை விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை விட, தி.மு.க. தற்போது வி.சி.க. மீது அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சீர்மை பதிப்பகம் ஒருங்கிணைத்த இந்த விழாவில் அமைச்சர் ஷாஜகானும் பங்கேற்றிருந்தார். கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத அடையாளங்களை முன்னிறுத்துவது தொடர்பான கருத்துக்களும் பரிமாறப்பட்டன.