PulseNews
அரசியல்

தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா? - மது குடித்து வந்தால் என்ன தண்டனை தெரியுமா? - மகிழ்ச்சியில் பெண்கள்

தமிழ்நாட்டில் மதுவால் வரும் பிரச்னைகள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. முன் ஒரு காலத்தில் உடல் உழைப்பை கொண்டவர்கள் தங்களின், உடல் வலியை போக்க மதுவை குடிப்பதாக சொன்னார்கள். அவர்களாவது கடினமான வேலையால் மதுவை குடிக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால், காலங்கள் போக மதுவை குடிப்பதற்கு வயது வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது. ஆண்கள் குடிப்பதும் இல்லாமல், தற்போது சில பெண்களும் குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது குடிப்பழக்கத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் அதிகரித்துள்ளது. பல அமைப்புகள் மதுவுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றன. இது ஓரளவிற்கு மாற்றத்திற்கான பாலமாக இருக்கிறது. இருந்தாலும், இதுபோதாது தமிழ்நாட்டில் ஒரு கிராம எடுத்துள்ள நடவடிக்கையை போல் எடுக்க வேண்டும். மதுவால் சீரழியும் இளைஞர்களை நல்வழிப்படுத்த நாகை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒரு சிறப்பான அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

மது இல்லா விழுந்தமாவடி: நாகையில் இளைஞர்களுக்கு ஊர் பஞ்சாயத்து அதிரடித் தடை

மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் பேணவும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவ கிராமம் முன்மாதிரியான அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.

​"மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்!" என்ற முழக்கத்துடன் ஊர் பஞ்சாயத்து சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனர் தற்போது அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கிராமத்தின் சுகாதாரம் மற்றும் அமைதியைக் கருத்தில் கொண்டு, திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும்.

​மேலும், திருமணமானவர்கள் குடித்துவிட்டு வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தகராறு செய்து புகார் வந்தால், அவர்களுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மது அருந்துபவர்கள் குறித்து ஊர் தலைவர்களிடம் ஆதாரம் தரும் நபர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ​இக்கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த கடந்த 10 நாட்களாக கிராமத்தில் குடும்பச் சண்டைகள் இன்றி அமைதி நிலவுவதாக பெண்கள், ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். சமூக ஆர்வலர்களும் இக்கிராமத்தின் முயற்சியைத் தமிழகத்திற்கே முன்மாதிரியான நடவடிக்கை எனப் பாராட்டி வருகின்றனர்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா? - மது குடித்து வந்தால் என்ன தண்டனை தெரியுமா? - மகிழ்ச்சியில் பெண்கள்
PulseNews சுருக்கம்

தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உடல் உழைப்புக்காக மது அருந்திய காலம் மாறி, தற்போது வயது வரம்பின்றி ஆண்களும் பெண்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது கவலையளிக்கிறது.

இத்தகைய குடிப்பழக்கத்தால் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்னைகள் பெருகி வருகின்றன. இந்த சூழலில், மது அருந்தி வருபவர்களுக்கு தண்டனை வழங்கும் முறையை அமல்படுத்தியுள்ள ஒரு கிராமத்தின் செய்தி பெண்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics