PulseNews
அரசியல்

"மூன்று மாசத்துல என்ன கி@ச்சீங்க?-வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட புதிய அரசு'- சுப்புரத்தினம் காட்டம்

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்களே ஆன நிலையில், தேர்தல் களத்தில் தமிழக மக்களுக்குக் கொடுத்த பிரதான வாக்குறுதிகள் எதையுமே தற்போதைய புதிய அரசு நிறைவேற்றவில்லை என்றும், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான எந்தவொரு நிதி ஒதுக்கீடோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ இல்லை என்றும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம் வைத்துள்ளார். இது தொடர்பாக நக்கீரன் டிவி சேனலுக்கு முன்னாள் எம்எல்ஏவும் , திமுக செய்தி தொடர்பாளருமான சுப்புரத்தினம் அளித்த பேட்டியில் இதுகுறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் அதில், ''தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமாக 'பைலட் ஸ்கீம்ஸ் ' என்று சொல்லக்கூடிய பிரதான திட்டங்களை எல்லாம் பக்கம்பக்கமாக அறிவித்துவிட்டு, இப்போது ஆட்சிக்கு வந்து வெறும் மூன்று மாதங்கள் தான் ஆகிறது என்று நொண்டிச்சாக்கு சொல்வதையும் கால அவகாசம் கேட்பதையும் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த செங்கோட்டையன் போன்ற ஆட்களுக்கெல்லாம் இதைப் பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்று நான் கேட்கிறேன்? ஒரு புதிய அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு எங்கள் திராவிட மாடல் அரசே மிகச் சிறந்த உதாரணம். கடந்த 2021-ஆம் ஆண்டில் எங்கள் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நாளையே தமிழக மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அவர் அஸ்யூமிங் சார்ஜ் அன்று தலைமைச் செயலகத்திற்கு நேராகச் சென்று, தமிழ்நாட்டு மக்களின் விடிவிற்காக மூன்று மிக முக்கியமான கோப்புகளில் தனது முதல் கையெழுத்துக்களை இட்டார். அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான முதலாவது பட்டதாரி நிதியுதவி திட்டம் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் ஆகிய மூன்று புரட்சிகரமான திட்டங்களையும் எந்தவொரு காலதாமதமும் இன்றி உடனடியாக அமல்படுத்திக் காட்டினார். ஆனால், தற்போதைய அரசோ மக்களை ஏமாற்றும் ஒரு மாய வித்தையைச் செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் நடப்பதற்கு முன்னால் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்தார்களே , அப்போதெல்லாம் இந்த அரசாங்கத்தின் நிதி நிலைமை என்ன, ஏது என்று தீர ஆராய்ச்சி பண்ணிவிட்டுத் தான் இந்த கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார்களா? இப்போது வந்து 'கடந்த அரசு எல்லாவற்றையும் துடைத்து வைத்துவிட்டுப் போய்விட்டது, அதனால் தான் எங்களால் செய்ய முடியவில்லை' என்று சாக்குப்போக்குச் சொல்வது இவர்களின் முழுமையான கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. பட்ஜெட் உரையை நீங்கள் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை முழுமையாகப் படித்துப் பாருங்கள். கொடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாகவாவது நிறைவேற்றுவோம் என்று எங்கேயாவது ஒரு வரியாவது இருக்கிறதா என்றால், அதுவும் எங்குமே காணப்படவில்லை. அண்ணன் ஓபிஎஸ் பேசும் போது மிக அழகாகச் சொன்னார், 'பட்ஜெட்டில் வாக்குறுதிகள் எங்கும் காணவில்லை, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது' என்று. மக்கள் இவர்களை நம்பி ஓட்டுப் போட்டதற்கு ஏமாற்றம் தான் பரிசாகக் கிடைத்துள்ளது. புதிய அரசு உடனடியாகத் தனது கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொண்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்'' என்றார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"மூன்று மாசத்துல என்ன கி@ச்சீங்க?-வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட புதிய அரசு'- சுப்புரத்தினம் காட்டம்
PulseNews சுருக்கம்

புதிய அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், தேர்தல் வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம் விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு நிதி ஒதுக்கீடோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ இடம்பெறவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நக்கீரன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இக்கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளதாக அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics