'ஒரு ஜோக் சொல்றேன் கேளுங்க'... வாக்காளர் பட்டியலில் 'இடம்பெயர்ந்தவர்' என பிரகாஷ் ராஜ் பெயர் நீக்கம்
கர்நாடகாவில் தற்போது நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) போது, வாக்காளர்கள் தவறாக 'இல்லாதவர்', 'இடம்பெயர்ந்தவர்', 'இறந்தவர்', 'இரட்டைப் பதிவு கொண்டவர்' அல்லது 'இதர' (ASDDO) பிரிவுகளில் சேர்க்கப்படுவதாகப் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரகாஷ் ராஜ், கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அலுவலகத்தால் "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்" எனக் வகைப்படுத்தப்பட்டுள்ள மாநிலத்தில் உள்ள 65 லட்சம் வாக்காளர்களில் தானும் ஒருவர் என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது; இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க உங்களுடன் ஒரு நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (SIR) பிறகு வாக்குரிமை பறிக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். நான் பிறந்து, வளர்ந்து, பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பெங்களூரு சாந்திநகர் தொகுதியில்தான் வாக்களித்து வருகிறேன். 2019 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் எம்..பி வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளேன். மேலும் அவர், எனது வாக்காளர் அடையாள அட்டையைத் திரும்பப் பெற நான் என்ன நடைமுறைகளைக் கடக்க வேண்டும் என்று பார்க்கிறேன். 'என்னென்ன காகிதங்களைக் காட்ட வேண்டுமோ?' (Kya kya kaagaz dikhana padega?). சரி, விளையாட்டு தொடங்கிவிட்டது (Game on). என் நண்பரே! உங்களைத் தேர்ந்தெடுக்காதவர்களின் வாக்குரிமையை மறுக்க நீங்க அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் எங்களை உங்களால் தடுக்க முடியுமா? என்று அந்த 95 விநாடி வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், 'நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்' என்ற பிரிவின் கீழ் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ள ASDDO சரிபார்ப்பு நிலையைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். முன்னதாக, பல வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாகக் கூறப்பட்ட வழக்கில், கடந்த மாதம் பெங்களூரு நீதிமன்றம் பிரகாஷ் ராஜுக்கு ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர் பணிக்காக கணக்கெடுக்கப்பட்ட 5.54 கோடி வாக்காளர்களில், 1.08 கோடி வாக்காளர்கள் (19.66% ) ASDDO பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் கணக்கெடுக்கப்பட்ட 1.03 கோடி வாக்காளர்களில் சுமார் 49 லட்ச வாக்காளர்கள், இம்மாத இறுதியில் வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னார்வ அமைப்புகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, வாக்காளர்கள் தங்களது பெயர் நிலையைச் சரிபார்க்கவும், தவறுதலாக வகைப்படுத்தப்பட்டிருந்தால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை (BLO) அணுகவும் கூடுதல் அவகாசம் வழங்கும் வகையில், கணக்கெடுப்பு கட்டத்திற்கான கடைசித் தேதியை ஆக.17 வரை நீட்டித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வி.அன்புகுமார் உத்தரவிட்டுள்ளார். இது இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட காலநீட்டிப்பாகும்.

கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின்போது, வாக்காளர்களின் பெயர்கள் தகுதியற்ற பிரிவுகளில் தவறாக சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த வரிசையில் நடிகர் பிரகாஷ் ராஜின் பெயரும் 'இடம்பெயர்ந்தவர்' என்ற பிரிவில் தவறாக சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரகாஷ் ராஜ், கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தால் தனது பெயர் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர் என நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது போன்ற குளறுபடிகள் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.