PulseNews
அரசியல்

“வட்டாட்சியருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?” - சச்சிதானந்தம் எம்.பி. கடும் கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பேருந்து நிலையம் அருகே துவங்கி வட்டாச்சியார் அலுவலகம் வரை கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நாளை (20.08.2026) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, பொது மக்களிடமும், அரசியல் கட்சி தலைவர்களிடமும் அதிகார ஆணவத்தோடு மனு வாங்க மாட்டேன் என சர்வாதிகாரி போல செயல்படும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாச்சாமி மீது துறை நீதியான நடவடிக்கை எடுக்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் குஜிலியம்பாறை வட்டாட்சியர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள் வட்டாட்சியரிடம் 18.08.2026 அன்று மாலைக்குள் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அறிக்கை அளிக்க தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சுற்றறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற மக்களவைத் உறுபினர் ஆர். சச்சிதானந்தம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் “கைரேகைச் சட்டம் அமலில் இருந்த காலத்திலும், அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்திலும் கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை. ஒரு தேசிய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் பற்றிய விவரம் சேகரிக்க சொல்லி பகிரங்க சுற்றறிக்கை அனுப்பும் வானளாவிய அதிகாரம் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளதா?. மணல் கடத்துவோர் பட்டியலையோ, ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலையோ, குற்றவாளிகள் பட்டியலையோ இதுபோன்று சுற்றறிக்கை போட்டு சேகரித்து வைத்துள்ளாரா?. பொதுமக்கள் வட்டாட்சியரை சந்திப்பதற்கு வாரத்தில் நான்கு நாட்கள் பகல் 12 முதல் 1 மணி வரை மட்டுமே எனவும் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தும் அய்யாசாமி என்ற வட்டாட்சியரை வருவாய்த்துறை திரும்பப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு உதவ வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“வட்டாட்சியருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?” - சச்சிதானந்தம் எம்.பி. கடும் கண்டனம்!
PulseNews சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள வட்டாட்சியர் அய்யாச்சாமி, பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் அதிகார ஆணவத்துடன் நடந்துகொள்வதாகவும், சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

குஜிலியம்பாறை பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெறவிருந்த இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு குறித்து, வட்டாட்சியருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்று எம்.பி. சச்சிதானந்தம் கேள்வி எழுப்பி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் நாளை (20.08.2026) நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics