“எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்” - முதல்வர் விஜய் அறிவிப்பு!
சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் விஜய் இன்று (19.08.2026) வெளியிட்டார். அதில், “3 லட்சத்து 16 ஆயிரத்திற்கு மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை, லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக ஒரு ரூபாய் உயர்த்தப்படும். மேலும் அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும், மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டு ஒன்றுக்கு தற்போதுள்ள 5 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில் பெரம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலக தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். திருநங்கையர்கள்பயன்பெறும் வகையில் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் 677 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 5 மண்டல புற்றுநோய் மையங்கள் தஞ்சாவூர் கோயம்புத்தூர் மதுரை திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தரைத்தளம் மற்றும் 8 தளங்களுடன் (ஜி +8) மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும். மருத்துவர்களுக்கு தேவையான பயிற்சியும், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்தும் வழங்கப்படும். முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தோய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதி பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்வது அவசியம் என கருதப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக செலவிற்காக மாதம் தோறும் ரூபாய் 75 ஆயிரம் வாகன படியாகவும், அலுவலக பணிகளில் உதவி செய்ய உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் 25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் முதல்வர் விஜய் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
மேலும், 3 லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்படுவதாகக் குறிப்பிட்டார். அரசு ஊக்கத்தொகையை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்துவதன் மூலம், ஒரு லிட்டர் பாலின் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.