விஜய்யே அழைத்தார்; சோபா செட் இல்ல... லாக்கர் வந்தாலும் நாங்க மாற மாட்டோம்: ரகசியத்தை உடைத்த பிரேமலதா
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்ன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அக்கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "தேர்தல் முடிந்த பிறகு சில கட்சியினர் தங்கள் கொள்கையை கூட மாற்றிக் கொண்டு த.வெ.க.வில் சென்று சேர்ந்து விட்டார்கள். தே.மு.தி.க.வுக்கு அழைப்பு வராமல் இல்லை. இன்றைய முதலமைச்சரே அழைத்தார். ஆனால், ஒரு முடிவை நாம் எடுத்துவிட்டால், அந்த கொள்கை முடிவில் எப்போதும் நாம் உறுதியாக இருப்போம். அதற்கு இதுதான் சான்று. சோபா செட் இல்லை, பீரோ இல்லை, லாக்கரே வந்தாலும் தே.மு.தி.க. தன் நிலையில் இருந்து மாறாது. ஏனென்றால் நமக்கு கொள்கை முக்கியம். ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றுவிட்டு, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கூட்டணியை மாற்றிக் கொள்ளும் நிலைப்பாடு தே.மு.தி.க.வுக்கு என்றும் கிடையாது." இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் இணைந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் த.வெ.க. அரசுக்குக் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தலைமையிலான கூட்டணியைப் பலப்படுத்த புதிய அரசியல் நகர்வுகளை அக்கட்சி முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த்தின் இந்த பேச்சு த.வெ.க.வுடன் கூட்டணி குறித்த பேச்சுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு உரையாற்றினார். மறைந்த தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர்தலுக்குப் பிறகு சில கட்சியினர் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொண்டு தவெக கட்சியில் இணைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். தங்களுக்கு அழைப்புகள் வந்ததாகவும், தற்போதைய முதலமைச்சர் கூட அழைத்ததாகவும் தெரிவித்த அவர், தாங்கள் எடுத்த கொள்கை முடிவில் இருந்து ஒருபோதும் மாறப்போவதில்லை என்று உறுதியாகக் கூறினார்.