மீண்டும் மீண்டும் மன்மத நன்றியா? இந்த முறை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தடுமாற்றம் - கனிமொழி கொடுத்த ரியாக்ஷன் என்ன?

தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு சட்டமன்ற கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில் தினசரி தவெக - திமுக-வினர் காரசார வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. அதேசமயம், சட்டசபையில் எழுத்துப் பிழையுடன் வாசிக்கும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் மன்மத நன்றி:

இந்த நிலையில், இன்று சட்டசபைக் கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான தவெக எம்எல்ஏ அருள்பிரகாஷ் அனைத்து மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், கள்ளக்குறிச்சி தொகுதி மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றார்.

அப்போது, மனமார்ந்த என்ற வார்த்தைக்கு பதிலாக முதலில் மன்மத என்ற வார்த்தையை பயன்படுத்தினார். ஏற்கனவே, சட்டமன்றத்தில் கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி மனமார்ந்த நனறி என்ற வார்த்தைக்குப் பதிலாக மன்மத நன்றி என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அது அப்போதும் பெரும் ட்ரோலாக மாறியது.

கனிமொழி ரியாக்ஷன்:

தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ இதே வார்த்தையை பயன்படுத்தியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் மன்மத என்ற வார்த்தையை தவறுதலாக கூறியதும் அவருக்கு முன்னாள் அமர்ந்திருந்த கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர், சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் கனிமொழி சிரித்தார். அவர் மட்டுமின்றி அருகில் இருந்த மற்ற தவெக எம்எல்ஏ-க்களும் சிரித்தனர்.

பின்னர், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் பிரகாஷ் வாழ்க தமிழ்நாடு, வளர்க தமிழ்நாடு, வளர்க கள்ளக்குறிச்சி என்று பேசி தனது உரையை முடித்தார். தற்போது இந்த வீீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்றத்தில் அதிகளவு எழுத்துப்பிழையுடன் வாசிப்பதற்காக ஆளுங்கட்சியான தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் விமர்சனசத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தொடர் விமர்சனம்:

ஏற்கனவே, நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழில் தடுமாற்றத்துடன் பேசியது விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தது. பின்னர், அவர் இதுதொடர்பாக அவையில் எழுந்த விமர்சனத்திற்கு ஆதங்கத்துடன் விளக்கம் அளித்தார். பின்னர், அதற்காக வருத்தமும் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆட்சியில் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தமிழும் கடும் விமர்சனத்திற்கு ஆளானது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு, இக்கூட்டத்தொடர் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சட்டப்பேரவையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே தினசரி காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், சட்டப்பேரவையில் வாசிக்கும்போது உறுப்பினர்கள் செய்யும் எழுத்துப் பிழைகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.