PulseNews
அரசியல்

“நம் வீட்டில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சியைப் பற்றிய தீர்மானம்” - முதல்வர் விஜய் பேச்சு!

நாடாளுமன்ற மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “நம்மளோட குடும்பத்தில இருக்கிற, நம்மளோட வீட்டில இருக்கிற நம்ம பாட்டியை, நம்ம அம்மாவை, நம்ம அக்காவை, நம்ம தங்கச்சியைப் பற்றிய ஒரு தீர்மானம். அதைப் பற்றி பேசுறதுக்கு, அவங்களுக்காகப் பேசுறதுக்கு, நம்ம மனசுல இருந்து, நம்ம இதயத்தில இருந்து பேசுறேன். இதுக்கு முன்னாடி இந்த விஜய்க்கு கிடைச்ச இடத்துக்கும், இதுக்கு முன்னாடி இந்த விஜய்க்கு கிடைச்ச இடத்துக்கும், இன்னைக்கு இந்த விஜய்க்கு கிடைச்சிருக்கிற இடத்துக்கும் மிகப்பெரிய காரணமாக இருக்கிறவர்கள் என்னோட பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சிங்கதான். மிகப்பெரிய காரணம்ங்கிறத என்னால மறுக்கவே முடியாது. அந்த நன்றி விசுவாசத்தோட, அப்படி ஒரு உணர்வோடதான் இப்போ எங்கே நின்னு பேசுறேன். பெருசா பணம் இருந்துட்டா ஒரு வீட்டுக்கோ, பெரிய பொருளாதாரம் இருந்துட்டா ஒரு நாட்டுக்கோ பெரிய பேர் வந்துடும்னு சில பேர் நினைக்கலாம். ஆனா, உண்மையாகவே ஒரு வீட்டுக்கோ, ஒரு நாட்டுக்கோ எப்ப பெரிய பேர் கிடைக்கும் தெரியுமா? அந்த வீட்டு பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில உயர்ந்தாதான், பெரிய பேரு ஒட்டுமொத்த சமூகத்துக்கே கிடைக்கும். நம்ம தமிழ்நாட்டு மண்ணுல சங்க காலத்தில் இருந்த அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, மிகப்பெரிய அடையாளமாய் இருக்கிற பெண் ஆளுமைகள் நிறைய பேர் இருக்காங்க. அவ்வையார், காக்கைப்பாடினியார் என்று சங்க காலத்து ஆளுமைகள்; கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி இவங்க எல்லாம் இலக்கியத்தில் நிலைத்து நிற்கிறவங்க. ஆண்டாள், காரைக்கால் அம்மையார் இவங்க எல்லாம் ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும் உயர்ந்த இடத்தில இருக்கிறவங்க. ராணி வேலுநாச்சியார், குயிலி, அம்புஜம் அம்மாள், ருக்மணி லட்சுமிபதி அம்மாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அஞ்சலை அம்மாள், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்னு நம்ம நாட்டோட விடுதலைப் போராட்டத்தில் கலந்துகிட்டவங்க நம்ம தமிழ்நாட்டு பெண் ஆளுமைகள் நிறைய பேர் இருக்காங்க. சுதந்திரப் போராட்டத்தில இருந்து சமூகநீதி போராட்டம் வரைக்கும் கலந்துகிட்டவங்கதான் நம்ம தமிழ்நாட்டு பெண்கள். அதுமட்டுமா, கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம்னு எல்லா துறைகளிலையும் இன்னைக்கு நம்ம தமிழ்நாட்டு பெண்களோட பங்களிப்பு பெருசா இருக்குன்றத யாரும் மறுக்கவே முடியாது. அப்படிப்பட்ட நம்ம வீட்டு பெண்களுக்கு அரசியலையும் முன்னேற வழிவகை செய்யணும். அதுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கணும். பெண்களுக்கு இடஒதுக்கீடு தர்றது ஏதோ சலுகைன்னு நினைச்சிடக்கூடாது. சமூகநீதி சார்ந்தது, அரசியலமைப்பு சார்ந்தது. நம்ம நாட்டோட மக்கள் தொகையில ஏறக்குறைய பாதி பேர் பெண்கள்தான். அதனால அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்படணும். அரசியலமைப்புச் சட்டமும் அவங்களுக்கு சமத்துவ உரிமையை வழங்கித்தானே இருக்கு. நம்ம தமிழ்நாட்டை எடுத்துக்கிட்டாலும், ஆண்களை விட பெண்கள்தான் அதிகம். ஓட்டு சதவீதத்திலும் கூட அவங்கதான் அதிகம். ஆனா அவங்களுக்கான அரசியல் இடம்னு பார்த்தா, 2021 சட்டசபையில 12 பெண்கள் இருந்தாங்க. இப்போ இந்த 2026 சட்டசபையில் 23 பெண்கள் இருக்கிறாங்க. ரெண்டு மடங்கு ஆகி இருக்கு. ஆனாலும் சதவீதக் கணக்குப்படி பெருசா உயரல” எனத் தெரிவித்தார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“நம் வீட்டில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சியைப் பற்றிய தீர்மானம்” - முதல்வர் விஜய் பேச்சு!
PulseNews சுருக்கம்

நாடாளுமன்ற மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் குறித்துப் பேசிய அவர், இது நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா மற்றும் தங்கச்சிகளுக்கானது என்று குறிப்பிட்டார்.

அவர்களுக்காகப் பேசுவது தனது இதயத்திலிருந்து வெளிப்படும் உணர்வு என்றும், இதற்காகத் தான் பேசுவதாகவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics