PulseNews
அரசியல்

“திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை” - பெ. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளைத் தமிழக முதல்வர் விஜய் நேற்று (24.08.2026) வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்ததாவது, “மக்கள் மத்தியிலே நான் அன்றே அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும், துறை வல்லுநர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும். துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கலந்தாலோசித்து, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவ்விடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும். இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்று (25.08.2026) வெளியிட்டுள்ள பதிவில், “எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் ‌பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மச்சேந்திர நாதன் ஐ.ஏ.எஸ். தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?. இந்த விஷயத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை” - பெ. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு!
PulseNews சுருக்கம்

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் தமிழக முதல்வர் விஜய் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தான் முன்னதாக அளித்த வாக்குறுதியின்படி பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அவர் அறிவித்தார். இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக, துறை வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசித்ததாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, திமுக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்று பெ. சண்முகம் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதிய விமான நிலையத் திட்டம் தொடர்பான அரசின் இந்த அறிவிப்பு மற்றும் செயல்பாடு குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics