“சொந்தமாகக் கார் இல்லை.. ஆட்டோவில் தான் வர்றேன்!”.. சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த MLAக்கள்.. தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளியான உண்மை!
MLAs Claim No Car in Tamilnadu Assembly: சொந்தமாகக் கார் இல்லை, ஆட்டோவில் தான் வருகிறோம்" எனக் கூறி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு வாகனக் கோரிக்கை விடுத்த எம்.எல்.ஏ-க்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில், அவர்களுக்குச் சொந்தமாக பென்ஸ், எட்டியோஸ், டிகோர் உள்ளிட்ட சொகுசு கார்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், தங்களிடம் சொந்தமாகக் கார் இல்லை என்றும் ஆட்டோவில்தான் பயணம் செய்வதாகவும் கூறி அரசு வாகன வசதி கோரி எம்.எல்.ஏ-க்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், இவர்களது தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில், பென்ஸ், எட்டியோஸ், டிகோர் உள்ளிட்ட சொகுசு கார்கள் அவர்களுக்குச் சொந்தமாக இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த முரண்பாடான தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.