அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்: சவாலுக்கு உட்படுத்தி இதுவரை 10 மனுக்கள்
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி 10 விஷேட மனுக்கள் வியாக்கியாணம் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுடிருந்தன. இந்த மனுக்கள் (19.08.2026) மாலையாகும் போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் ...

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் 10 விஷேட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிராக இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் விளக்கம் கோரியே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 19.08.2026 அன்று மாலை வரை குறித்த மனுக்கள் நீதிமன்றத்தில் பதிவாகியிருந்தன.