“ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ரத்து” - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சாவர்கருக்கு எதிராகக் கடுமையான அவதூறான கருத்துகளை முன்வைத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்திக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரத்தில், தன் மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை ராகுல் காந்தி தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தான் அந்த மனுவை ஏற்க மறுத்ததுடன், எஃப்ஐ.ஆரையும் ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்திருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர் அப்போது, “ராகுல் காந்திக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான சான்ஷன் (Sanction) வழங்கப்பட்டுள்ளதா?” என நீதிபதி தீபாங்கர் தத்தா கேள்வி எழுப்பினார். அதற்கு, “சான்ஷன் வழங்கப்படவில்லை” என்று கூடுதல் ஜொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் தெரிவித்தார். இதனையடுத்து ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம், ராகுல் காந்திக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சாவர்க்கர் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, ராகுல் காந்தி மீது உத்தரப் பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
இருப்பினும், அந்த மனுவை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது எனத் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.