PulseNews
அரசியல்

'குமரி முதல் சென்னை வரை இலவசம்னு சொன்னீங்களே எங்கே?';பெண்களை ஏமாற்றிய கபட நாடகம்- சுப்புரத்தினம் தடாலடி

தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்கும், எந்தவொரு அரசுப் பேருந்திலும் பெண்கள் முற்றிலும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று வானளாவிய கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் பெண்களை இந்த அரசு முற்றிலும் ஏமாற்றிவிட்டது என்ற அதிருப்தியும் ஏமாற்றமும் தமிழக மகளிர் மத்தியில் பெருமளவில் கிளம்பியுள்ள தாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நக்கீரன் டிவி சேனலுக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக செய்தி தொடர்பாளருமான சுப்புரத்தினம் அளித்த பேட்டியில் இதுகுறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், ''அவர்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் தமிழ்நாட்டுப் பெண்களைப் பார்த்து என்ன சொன்னார்கள்? 'நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுப் பெண்கள் கன்னியாகுமரியிலிருந்து சென்னை பாரிமுனை வரை எந்தவொரு பேருந்திலும் முற்றிலும் இலவசமாகச் செல்லலாம்' என்று மிகத் தெளிவாகவும் சத்தமாகவும் கூறினார்கள். இன்குளூடிங் ஏசி பஸ் (குளிர்சாதன பேருந்து) உட்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என்று தான் அதற்குப் பொருள். அதை நம்பித் தான் ஒட்டுமொத்த தமிழகப் பெண்களும் மனமகிழ்ந்து, பூரித்துப் போய் இந்த புதிய அரசுக்குத் தங்களின் ஓட்டுகளை அள்ளிப் போட்டார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நெருங்கும் இந்தச் சூழலிலும் பெண்களுக்கான அந்தப் பயணத் திட்டத்தை அமல்படுத்தாமல் பெண்களைப் பெரும் ஏமாற்றத்தில் தவிக்க விட்டுள்ளார்கள். நாங்கள் ஒன்றும் இல்லாததை இவர்களிடம் கேட்கவில்லை, இவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன பிரதான திட்டங்களை மட்டுமே கேட்கிறோம். திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் பெயரால் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்' என்று எங்கள் தலைவர் அறிவித்து, தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள கோடிக்கணக்கான பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் எவ்வித தடையுமின்றி வழங்கிக் கொண்டிருந்தார். இவர்களோ தேர்தல் நேரத்தில் அதைவிட அதிகமாகக் கொடுப்போம் என்று ஆசை காட்டிவிட்டு, இப்போது எதையுமே செய்யாமல் சொத் தை வாதங்களையும், சொத் தை கால அவகாசங்களையும் பேசிக் கொண்டு மக்களைத் திசை திருப்புகிறார்கள். எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் எத்தனை முறை இதற்காகக் குரல் கொடுத்தார், 21 மாசமாகப் போராடினார் என்று பேசுவதெல்லாம் வெறும் சொத் தை வாதம் மற்றும் இவர்களின் கையாலாகாத்தனம் மட்டுமே ஆகும். மக்களை ஒரு மாய வலையில் வீழ்த்துவதற்காகவும், ஓட்டுகளை வாங்குவதற்காகவும் மட்டுமே இத்தகைய கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தார்கள் என்பது இப்போது அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது. தமிழ்நாட்டுப் பெண்கள் தங்களை ஏமாற்றிய இந்த அரசுக்கு வரும் காலத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை'' என்று மிகக் கடுமையாகச் சாடினார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'குமரி முதல் சென்னை வரை இலவசம்னு சொன்னீங்களே எங்கே?';பெண்களை ஏமாற்றிய கபட நாடகம்- சுப்புரத்தினம் தடாலடி
PulseNews சுருக்கம்

தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் உள்ள எந்தவொரு அரசுப் பேருந்திலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று திமுக அரசு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் பெண்களை ஏமாற்றிவிட்டதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம் விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரத்தால் தமிழகப் பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நக்கீரன் தொலைக்காட்சியிடம் பேசிய சுப்புரத்தினம், பெண்களை ஏமாற்றும் வகையில் அரசு கபட நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics