PulseNews
அரசியல்

Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் தமிழ் மொழியை கிறிஸ்தவ மதத்தோடு ஒப்பிட்டு பேசியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டென்ஷனான மரிய வில்சன்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இதில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது எழுந்து பேசிய கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ., நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு மற்றும் இலக்கணப் பிழைகளைக் கேலி செய்யும் வகையில் சுட்டிக்காட்டி பேசினார். இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இதற்கு மரிய வில்சனும் பதிலடி கொடுத்தார்.

அவர் பேசும்போது, “எனக்கு ஒரு மொழியை கிறிஸ்தவ மதம் கற்றுக் கொடுத்துள்ளது. அது அன்பு, அமைதி, இரக்கத்தின் மொழியாகும். இது எவ்வளவும் தமிழ் படித்தாலும் பாதி பேருக்கு தெரியாது. நான் பைபிளில் படித்திருக்கிறேன்” என கூறினார். பின்னர் சபாநாயகர் தலையிட்டு இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்

இந்த நிலையில் அமைச்சர் மரிய வில்சன் பேசியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா அமைச்சர் தி மரிய வில்சன் அவர்களே?

சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். ஆனால், எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது.

“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Also Read: DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!

பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் தமிழ் மொழியை கிறிஸ்தவ மதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ் மொழியை விட மதம் பெரியதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ, அமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு மற்றும் இலக்கணப் பிழைகளை விமர்சித்தார். இதனால் கோபமடைந்த அமைச்சர் மரிய வில்சன், இது தொடர்பாகப் பதிலளிக்கையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics