தீமிதி திருவிழா
காஞ்சிபுரம்: அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் கோயிலில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய நிகழ்வில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நந்தம்பாக்கம் பெரியார் நகர்ப் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 42ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.தீமிதி திருவிழாவையொட்டி ஸ்ரீ பவானி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை கூழ் வார்த்தல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று (ஆகஸ்ட் 16) நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்தவாறு கையில் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், குழந்தைகளை சுமந்துகொண்டும் விரதத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.தீமிதி திருவிழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ பவானி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் விழா குழுவினர் சட்ராஜ் வெங்கட், மூர்த்தி, சதீஷ் உள்ளிட்டோர் ஏற்பாட்டில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து இறுதியாக வானவேடிக்கை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலாவும், கும்பம் கலைத்தல் நிகழ்வும் நடைபெற்றது. இதில் நந்தம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ பவானி அம்மனை தரிசித்துச் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் நந்தம்பாக்கம் பெரியார் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் கோயிலில் 42-வது ஆண்டு தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்துத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இந்நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர்.