PulseNews
அரசியல்

CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்

CM Vijay Delimitation Bill: தொகுதி மறுவரையறையுடன் இணைத்து மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை தாமதப்படுத்தக் கூடாது என, முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம்:

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், “நமது குடும்பத்தில் இருக்கும், வீட்டில் இருக்கும் நமது பாட்டி, அம்மா, அக்கா மற்றும் தங்கையை பற்றிய தீர்மானம். அதுபற்றி பேசுவதற்கு அவர்களுக்காக பேசுவதற்கு நம் மனதில் இருந்தும் இதயத்தில் இருந்தும் பேசுகிறேன். இதற்கு முன்பாக இந்த விஜய்க்கு கிடைத்த இடத்திற்கும் இன்று விஜய்க்கு கிடைத்திருக்கும் இடத்திற்கும் மிகப்பெரிய காரணமாக இருப்பதும் பாட்டி, அம்மா, அக்கா மற்றும் தங்கைகள் தான் என்பதை மறுக்கவே முடியாது. அந்த நன்றி விசுவாத்துடனும், உணர்வோடு தான் இங்கிருந்து பேசுகிறேன்.

மகளிருக்கான 33% இடஒதுக்கீடு

பெரியதாக பணம் இருந்தால் ஒரு வீட்டிற்கோ, பெரிய பொருளாதாரம் இருந்தால் ஒரு நாட்டிற்கோ பெரிய பெயர் வந்துவிடும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் ஒரு வீட்டின் பெண்கள், தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் தான் பெரிய பெயர் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கிடைக்கும். இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா இணைப்பதால், அதனை நடைமுறைபடுத்த மேலும் ஆண்டுகள் தாமதமாகலாம். எனவே பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல, அவர்களுடைய ஜனநாயக உரிமை ஒரு பெண் அதிகாரம் பெறும்போது ஒரு குடும்பம் உயர்கிறது; ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம் பெறும்போது ஒரு நாடே உயர்கிறது.

தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானம்

தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்துக்கட்சி எம்.பிக்களின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதன் முடிவில் தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் தனி தீர்மனம் நிறைவேற்றுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி முன்மொழியும் தீர்மானத்தில்,

தற்போது உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும்

மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும்

தற்போதைய மற்றும் மாநிலங்களவையின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடரவும்

பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை கால தாமதம் இன்றி தற்போதுள்ள 543 என்ற எண்ணிக்கையிலிருந்தே 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை கோரி தமிழ்நாடு சட்டமன்றம் கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றுகிறது

இதையும் படியுங்கள்: TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?

CM விஜயின் கோரிக்கைகள்

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நீட்டிக்கப்பட வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையேயான விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள நிலையிலேயே தொடர வேண்டும்

வரவிருக்கும் மக்களை பொதுத்தேர்தலிலும், சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்

என தமிழ்நாடு அரசு ஒருமனதாக வரவேற்கிறது. இந்த தீர்மானம் ஒரு அரசியல் கட்சியின் தீர்மானம் அல்ல. தமிழ்நாட்டின் உரிமையை நிரந்தரமாக பாதுகாக்கும் தீர்மானம். எனவே அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் இதனை ஒருமனதாக நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
PulseNews சுருக்கம்

தொகுதி மறுவரையறை பணிகளுடன் இணைத்து மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை தாமதப்படுத்தக் கூடாது என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவர் தனித்தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அத்தீர்மானத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics