PulseNews
அரசியல்

குதிரை பேரம் வழக்கில் அதிரடி திருப்பம்...! விசாரணை தடையை நீட்டித்த சென்னை ஐகோர்ட்டு...!

ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் என்.இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் மீது தொடரப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், குதிரை பேரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஏற்கனவே தடை விதித்திருந்தது.இதேபோல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் மீது தொடரப்பட்ட மதுபான விற்பனை நிறுவன முறைகேடு வழக்கிலும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷ், தனக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு எதிரான விசாரணைக்கு மட்டும் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, இரு வழக்குகளிலும் சென்னை ஐகோர்ட்டு விதித்திருந்த தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.எனினும், சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இதுவரை எந்தத் தடையும் விதிக்கவில்லை என்று நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குதிரை பேரம் மற்றும் மதுபான விற்பனை நிறுவன முறைகேடு தொடர்பான இரு வழக்குகளிலும் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீதிபதிகள் நீட்டித்தனர். மேலும், இரு வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணையையும் 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
குதிரை பேரம் வழக்கில் அதிரடி திருப்பம்...! விசாரணை தடையை நீட்டித்த சென்னை ஐகோர்ட்டு...!
PulseNews சுருக்கம்

ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ என்.இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், குதிரை பேரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஏற்கனவே விதித்திருந்த தடையை தற்போது நீட்டித்துள்ளது. மேலும், செந்தில் பாலாஜி தொடர்புடைய மதுபான விற்பனை நிறுவன முறைகேடு வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics