PulseNews
அரசியல்

அரசு உதவி வேணுமா? அப்போ இந்த 3 தேதிகளைக் குறித்து வச்சுக்கோங்க...

நாகை: தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் முதிர்கன்னிகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல் மற்றும் பல்வேறு தொழிற்பயிற்சிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட நலத்திட்டங்கள் இந்த வாரியத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் முன்னுரிமைகளைப்பெற தகுதியுடைய பெண்கள் அனைவரும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வது அவசியமாகும். எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியானப் பயனாளிகள் பயன்பெறும் வகையில், சிறப்புப் பதிவு முகாம்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இணையதளப் பதிவு மற்றும் தேவையான ஆவணங்கள்

இத்திட்டத்தில் இணைய விரும்பும் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் பேரிளம்பெண்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பயனாளிகள் தங்களின் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் தற்போதைய வசிப்பிட முகவரிக்கான சான்று ஆகிய ஆவணங்களுடன் நேரில் வருகை தந்து தங்களது பெயர்களை வாரியத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வட்டார வாரியாக முகாம் நடைபெறும் விவரங்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய பயனாளிகள் எளிதில் பதிவு செய்யும் வகையில், பல்வேறு வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன. அந்தந்த நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த சிறப்புப் பதிவு முகாம்கள் செயல்படும்.

* 01.09.2026: திருமருகல் மற்றும் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்.

* 02.09.2026: தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்.

* 03.09.2026: கீழையூர் மற்றும் கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பெண்கள் அனைவரும் இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி, குறித்த தேதிகளில் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து நலவாரிய உறுப்பினராகப் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தனது செய்திக் குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளார்.

வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள்

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதியும் பெண்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் முன்னுரிமையும் சிறப்புச் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக:
* கல்வி உதவித்தொகை: ஆதரவற்ற மகளிரின் குழந்தைகளின் மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்விக்கான சிறப்புக் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

* சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி: மகளிரின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் பொருட்டு தையல் பயிற்சி, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, கணினிப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு இலவச தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

*சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கம்: பெண்களை ஒருங்கிணைத்து புதிய சுயஉதவிக் குழுக்களை அமைத்து, அவர்களுக்குத் தேவையான கடனுதவிகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

* சுகாதார வசதிகள்: பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் இலவச மருத்துவ முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

* அரசுச் சலுகைகளில் முன்னுரிமை: அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், இலவச வீடுகள் வழங்கும் திட்டம் மற்றும் கடன் உதவிகளைப் பெறுவதில் இவ்வாரியத்தின் உறுப்பினர்களுக்கு முதன்மை முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியானப் பயனாளிகள் அனைவரும் அரசின் இந்நலத்திட்டங்களை தங்கு தடையின்றிப் பெறும் வகையில், சிறப்புப் பதிவு முகாம்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அரசு உதவி வேணுமா? அப்போ இந்த 3 தேதிகளைக் குறித்து வச்சுக்கோங்க...
PulseNews சுருக்கம்

நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த வாரியம் இயங்குகிறது.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கம் மற்றும் பல்வேறு தொழில் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இவர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை இந்த வாரியம் செயல்படுத்தி வருகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics