“பெஞ்ச் மேல் ஏறி நின்னு கையை தூக்கி நின்னேன்...” - எ.வ.வேலு பேச்சால் பேரவையில் சிரிப்பலை!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வரும் சூழலில், துறை ரீதியான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று அறிவுப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று (31-08-26) மாற்றுத் திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன், வேளாண்மைத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. அப்போது தங்களுடைய கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என திமுக, அதிமுக, பா.ம.க, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து எழுந்து நின்று குரல் எழுப்பி வந்தனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை அமறுமாறு கூறியப் பிறகும் அவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர். இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் காட்டமாகப் பேசினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “அனைத்து கட்சி கொறடாக்களுக்கு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். அரசு கொறடாவை அன்றைக்கு அவை முன்பு வேகமாக வந்தார். நீங்கள் அரசு கொறடாவாக இருக்கிறீர்கள் போய் அமருங்கள் என்று நான் சொன்னேன். அதை தான் எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலுவுக்கும் சொல்கிறேன். நீங்கள் எழுந்து நிற்கிற போது மற்றவர்கள் எழுந்து நிற்க கூடாது என்பதை கொஞ்சம் அறிவுரை சொல்லுங்கள். ஏனென்றால் உங்களையும் மீறி அவர்கள் வருகிறார்கள். நீங்கள் கழுத்தை பிடிச்சு தள்ளி பார்க்கிறீங்க, அதையும் மீறி வருகிறார்கள். இதை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் சொல்கிறேன். நீங்கள் பேசினால் மற்றவர்கள் எழுந்து நிற்க கூடாது. வக்காலத்து வாங்கிக் கொண்டு, பரிந்துரை செய்து கொண்டு பாய்ந்து வருகிற நிலைமை அங்கேயும் இருக்கிறது. கொறடா என்கின்ற முறையில் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். நான் கோபப்படுகிற அளவுக்கு நீங்கள் உட்காராமல் இருந்தால் இந்த நியாத்தை எங்கே சொல்ல முடியும்? பிற்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் கொறடாக்கள் பார்த்துகொள்ள வேண்டும்” என்று ஆவேசத்துடன் எதிர்க்கட்சிகளை லெப்ட் ரைட் வாங்கினார். இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி கொறடாவும் திமுக முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, “நீங்கள் சொன்ன கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதுவரைக்கும் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அவை முன்பு வந்ததில்லை. அவை முன்பு வந்தால் தான் அது தவறு. இதே மாமன்றத்தில் சட்டப்பேரவைத் தலைவராக காளிமுத்து இருந்த போது, அவருடைய கவனத்தை ஈர்க்க கையை தூக்கி தூக்கி பார்த்தேன், கை வலித்துவிட்டது. குரல் கொடுத்து பார்த்தேன், ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதே பெஞ்ச் மேல் ஏறி நின்னு கையை தூக்கி நின்னேன். அப்புறம் தான் அவருடைய கவனம் ஈர்க்கப்பட்டது. அதனால் பேரவைத் தலைவருடைய கவனத்தை ஈர்ப்பதற்கு எழுந்து நிற்கலாம், கையை தூக்கலாம் என்பது அனுமதிக்கப்படுகிறது” என்று கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஒரு மாதமாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாற்றுத்திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன் மற்றும் வேளாண்மைத் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
அப்போது, தங்கள் கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் கொண்டு வர அனுமதி கோரி திமுக, அதிமுக, பாமக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முற்பட்டனர். அந்த சமயத்தில் அமைச்சர் எ.வ.வேலு தனது அனுபவத்தை நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டதால், பேரவையில் சிரிப்பலை எழுந்தது.