TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?

TN Govt Officials: பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்தை விரும்பாத நீர்வளத்துறை அதிகாரிகள், உள்நோக்கத்தோடு விடுப்பில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பணியிடமாற்றம் அதிரடி - விடுப்பில் அதிகாரிகள்

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி என நான்கு மண்டலங்கள் உள்ளன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, ஊழலை ஒழிக்கும் வகையில் இந்த துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், புதியதாக நியமிக்கப்பட்ட பணியிடத்தை விரும்பாத அதிகாரிகள், தங்களது பழைய பதவியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனராம். குறிப்பாக பலர் இதுவரை புதிய பணியில் சேராமல் விடுப்பில் சென்றுள்ளனர். இதனால், பொதுமக்களுக்கான ஏராளமான அரசுப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

அரசியல் புள்ளிகளை நாடும் அதிகாரிகள்:

இதனிடையே, பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. அந்த தகவல்களின் அடிப்படையில் அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் பணியிடங்களை உறுதிசெய்ய அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனராம். ஆளுங்கட்சி மற்றும் தவெகவின் கூட்டணி கட்சியின் முக்கிய பிரமுகர்களை நாடி தங்களது பணியிடங்களை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனராம். ஆனால், அரசு நிர்வாகத்தை சேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கு ஏதுவாக மேற்கொள்ளப்பட்ட பணியிடமாற்றங்களை மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது என அரசுத்தரப்பு உறுதியாக உள்ளதாம். முதலமைச்சரின் அறிவுறுத்தல்களை தீவிரமாக பின்பற்றுவதில் நீர்வள அமைச்சர் என். ஆன்ந்த் மிகவும் உறுதியாக உள்ளாராம்.

பணிக்கு வராவிட்டால் சம்பளம் கட்?

பணியிட மாற்றம் செய்யப்பட்டு பல வாரங்கள் ஆகியும் சில அதிகாரிகள் புதிய பணியில் இணையாமல் உள்ளனர். இதுதொடர்பாக பேசிய நீர்வளத்துறை அதிகாரி ஒருவர், “பணியில் சேராமல், விடுப்பில் உள்ள ஐந்து செயற்பொறியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, முதன்மை தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன் வாயிலாக, சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஜானகி, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஜெயகுமாரி ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. புதிய பணியில் சேர வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்னரும், வேண்டுமென்றே பணிக்கு வராமல் இருப்பது முறைகேடாகும். அரசு விதிகளின்படி விடுப்பை விட, பொது சேவையின் தேவைகள் தான் முக்கியம். எனவே, பணிக்கு வராத பொறியாளர்களின் ஊதியத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என பதிலளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: TN Weather News: சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை

அரசு அதிகாரிகள் மீது ஆக்ஷன்?

இதனிடையே, பெரும்பாலான துறைகளில் உள்ள அதிகாரிகள் இன்னமும் கூட திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது. அறநிலையத்துறை தொடர்பான அறிவிப்புகளை சேகர்பாபு முன்கூட்டியே சட்டமன்றத்தில் சொன்னதும் இதற்கு முக்கிய உதாரணமாகும். இதையடுத்து, சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு, அமைச்சரவை மாற்றமின்றி பல முக்கிய அதிகாரிகள், திமுகவிற்கு நெருக்கமானவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தூக்கி அடிக்கப்படுவது உறுதியாகிவிட்டதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு நீர்வளத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களுக்குப் பிடிக்காத இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், உள்நோக்கத்துடன் விடுப்பில் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களில் பணிபுரியும் அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று பணியில் சேர மறுத்து காலம் தாழ்த்தும் அதிகாரிகள், தொடர்ந்து விடுப்பில் செல்வதைக் கண்டித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணியில் சேராத அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படாது என அரசு எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.