PulseNews
அரசியல்

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும் சூழல் எழுந்துள்ளது” - உதயநிதி கருத்து!

சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளைத் தமிழக முதல்வர் விஜய் இன்று (24.08.2026) வெளியிட்டார். அதில், “விவசாயிகளைக் காக்கும் வகையில் பரந்தூர் விமான நிலைய அமைக்கும் பணிகள் கைவிடப்படுகிறது. இதற்கான மாற்று இடம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் தற்போது உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் (Sofa Model) அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India), ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Union Civil Aviation Ministry) உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன. இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன. இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன. ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும் சூழல் எழுந்துள்ளது” - உதயநிதி கருத்து!
PulseNews சுருக்கம்

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று (24.08.2026) வெளியிட்ட அறிவிப்பில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகவும், அதற்குப் பதிலாக மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பரந்தூர் திட்டத்திற்கான மாற்று இடம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இத்தகைய சூழலால் புதிய நிறுவனங்கள் சென்னைக்கு முதலீடு செய்ய வரத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics