தீர்வின்றி தொடரும் நிலமிழந்த பலாலி மக்களின் கோரிக்கை போராட்டம்
பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று 10ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலிச் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “அனுர அரசே, மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறாக இருக்காதே”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் மீளக் கையளி”, “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “இராணுவப் பிடியிலிருந்து எங்கள் காணிகளை விடுவி” உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு தமது கோரிக...

பலாலிப் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவித்து, இயல்பு வாழ்க்கையை மீண்டும் பெற்றுத் தருமாறு கோரி நிலமிழந்த மக்கள் 10ஆவது வாரமாக அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பலாலிச் சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தங்கள் காணிகளைத் தமக்கு மீள ஒப்படைக்க வேண்டும் என்றும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அரசு தடையாக இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். தங்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவிக்கக் கோரி இந்தப் போராட்டம் தொடர்கிறது.