PulseNews
அரசியல்

Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் எதிர்கால நலனை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகள் கல்வியை பாதியில் நிறுத்தக்கூடாது என்பதற்க்காக உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்த தகுதியுடைய மாணவிகளுக்கு, பட்டப்படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் நோக்கில் தொட்டில் குழந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகளுக்கு உதவித்திட்டம்

அந்த வகையில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தில், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா 25,000 ரூபாய் நிலையான வைப்புத்தொகையாக தமிழ்நாடு அரசால் வரவு வைக்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால், அந்தக் குழந்தையின் பெயரில் ரூ.50,000 நிலையான வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், தலா ரூ.25,000 வீதம் வைப்புத் தொகை செய்யப்படுகிறது.

1,50 லட்சம் முதிர்வு தொகை

பெண் குழந்தைகள் கல்வி கற்று, பாதுகாப்புடன் வளர்ந்து, எதிர்காலத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே இத்திட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது

இந்தத் தொகையானது அந்த பெண் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, வைப்புத்தொகை மற்றும் வட்டியுடன் முதிர்வுத் தொகையாக சுமார் ரூ.1,50,000 வரை பெண் குழந்தைக்கு வழங்கப்படும். மேலும், 6-ஆம் ஆண்டு முதல் கல்விச் செலவுக்காக ஆண்டுதோறும் 1,800 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன.?

குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்
ஆண் குழந்தை இருக்கக் கூடாது.
பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வயது நிறைவதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

இரு குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள்
பெற்றோரின் வயதுச் சான்று
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைச் சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
ஆண் குழந்தை இல்லை என்பதற்கான வட்டாட்சியர் சான்றிதழ்
குடியிருப்பு தொடர்பான ஆவணங்கள்

எப்படி விண்ணப்பிப்பது?

இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பத்தை அரசு இ-சேவை மையம் மூலம் சமர்ப்பிக்கலாம்.

எந்த திட்டம் விண்ணப்பிப்பது.?

ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பம் – திட்டம் I: ரூ.50,000 நிலையான வைப்புத் தொகை.

இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பம் – திட்டம் II: ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.25,000 நிலையான வைப்புத் தொகை

விண்ணப்பிக்கும் வழிமுறை:

அருகிலுள்ள அரசு இ- சேவை மையத்திற்குச் செல்லவும்.

“பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்” விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கவும்.

உங்கள் குடும்பத்திற்கு பொருந்தும் திட்டம்-I அல்லது திட்டம்-II தேர்வு செய்யப்படும்.

தேவையான ஆவணங்களை இ-சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப விவரங்கள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையால் சரிபார்க்கப்படும்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், குழந்தையின் பெயரில் அரசின் விதிமுறைகளின்படி நிலையான வைப்பு தொகை செய்யப்படும்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால நலனை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக, பெண் குழந்தைகள் கல்வியைப் பாதியில் கைவிடுவதைத் தவிர்க்க, உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, அதன் பிறகு உயர்கல்வியில் சேரும் தகுதியுடைய மாணவிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகையானது மாணவிகளின் பட்டப்படிப்பு முடியும் வரை தொடர்ந்து வழங்கப்படும்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics