PulseNews
அரசியல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம்.!

சட்டப்பேரவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து திமுகவில், கட்சி பதவிகளுக்கான வயது வரம்பு, பதவிகாலம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திமுகவின் நிர்வாக நடவடிக்கைகள் கடுமையானதாகத்தான் இருக்கும்; சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கட்சிக்குள், நிர்வாகிகளுக்குள் இருந்த தவறுகளை கண்டறிய தவறிவிட்டோம் என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், இளைஞர்கள், பெண்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவது அவசியம் என்று கூறியுள்ளார். ((புதுமுகங்களுக்கு அதிகளவிலான பொறுப்புகள் வழங்கப்படும் என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின்,)) கொள்கையில், போராட்டக் குணத்தில் வலிமையாக இருக்கிறவர்கள் கூட, நமது கட்சி நிர்வாகிகளை அரவணைப்பதில் சறுக்கிவிடுவதாக வேதனை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ((வெறும் ஒரு மாவட்டச் செயலாளரை மட்டும் வைத்து அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிட முடியாது என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாக Comeback கொடுப்போம் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். திமுகவினர் முதலில் தங்கள் குடும்பத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அரசியல் பேசுவதோடு, தங்களின் உற்றார், உறவினர்களிடம் பரப்புரை செய்து வாக்குகளை பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் முதலமைச்சர் விஜய், திமுக கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிசியாக இருப்பதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார். திமுக செயற்குழுவில், மொத்தம் 9 தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதில், மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 70ஆக நிர்ணயிக்கப்படுவதாகவும், ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. கிளைச் செயலாளர், வட்டச் செயலாளர், பேரூர் கழக செயலாளர், பகுதிச் செயலாளர் ஆகிய கட்சி பதவிகளுக்கு வயது வரம்பை அறிவித்துள்ள திமுக செயற்குழு, குறிப்பிட்ட பதவிகளில் ஒருவர் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 77 கட்சி மாவட்டங்கள் எண்ணிக்கையை 110ஆக உயர்த்தி திமுக செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது

Polimer News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம்.!
PulseNews சுருக்கம்

சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் கட்சிப் பதவிகளுக்கான வயது வரம்பு மற்றும் பதவிக்காலம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகிகளுக்குள் இருந்த தவறுகளைக் கண்டறியத் தவறியதை ஒப்புக்கொண்ட மு.க.ஸ்டாலின், இனி திமுகவின் நிர்வாக நடவடிக்கைகள் கடுமையாகவும், சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics