PulseNews
அரசியல்

ஆங்கிலக் கால்வாய் வழியாக அகதிகளுடன் பிரிட்டன் புறப்பட்ட படகு தடுத்து நிறுத்தம்.

வடக்கு பிரான்சில் இருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக அகதிகளுடன் பிரிட்டனை அடையவிருந்த ஒரு சிறிய படகை வழிமறித்து பிரெஞ்சு எல்லைக் காவல் படையினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலில் பயணம் செய்வதற்காக பாதுகாப்பு கவசம் அணிந்திருந்த அகதிகள், பிரெஞ்சு எல்லைக் காவல் படையினர் மீது பொருட்களை வீசி தாக்கினர். அப்போது சில காவலர்கள், காற்றடைக்கப்பட்ட படகை வெட்டி சேதப்படுத்தினர். கடந்த சில மாதங்களாக வடக்கு பிரான்ஸ் வழியே அகதிகளை ஏற்றிக்கொண்டு சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்கு வரும் படகுகள் தடுத்து நிறுத்தப்படுவதாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Polimer News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆங்கிலக் கால்வாய் வழியாக அகதிகளுடன் பிரிட்டன் புறப்பட்ட படகு தடுத்து நிறுத்தம்.
PulseNews சுருக்கம்

வடக்கு பிரான்சில் இருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக அகதிகளுடன் பிரிட்டனுக்குச் சென்றுகொண்டிருந்த சிறிய படகை பிரெஞ்சு எல்லைக் காவல் படையினர் வழிமறித்துத் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

பாதுகாப்பு கவசம் அணிந்திருந்த அகதிகள், எல்லைக் காவல் படையினர் மீது பொருட்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சில காவலர்கள் அந்த அகதிகளின் காற்றடைக்கப்பட்ட படகை வெட்டி சேதப்படுத்தினர். கடந்த சில மாதங்களாகவே இது போன்ற சட்டவிரோதப் பயணங்கள் தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics