Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

முதலமைச்சர் விஜய்க்கு விசிக மீதும், என் மீதும் போட்டி பொறாமை எதுவும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு மலர் வெளியீடு விழா நேற்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றது. அப்போது, “உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் ஏராளமான விசிக தொண்டர்கள் நெடுஞ்சாலைகளிலேயே மாட்டிக் கொண்டார்கள். அதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை. வன்முறை எதுவும் நடைபெறவில்லை. இதனையெல்லாம் பார்த்தவர்கள் மேடையில் என்னை நோக்கி வந்த இளைஞர்களின் ஆர்வத்தை ஒழுங்கீனம் என விமர்சிக்கிறார்கள். இது திட்டமிட்ட சதிச்செயல். விசிக வலிமைப் பெறக்கூடாது என உளவியல் தாக்குதல் நடத்துகிறார்.

முதலமைச்சர் விஜய் வருகைக்குப் பின் எத்தகைய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். நீண்ட பாரம்பரியம், பின்புலம், கட்டமைப்பு வசதிகள் கொண்ட கட்சிகள் நெடுநாள் வாக்கு வங்கியை இழந்து நிற்கிறது. அதைப் பற்றி எல்லாம் பேசாதவர்கள், ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இல்லாத ஒரு கட்சி நாங்கள் தான் அடுத்து ஆளப்போகிறோம் என சொல்லாத கட்சியான விசிக குறிவைக்கப்படுகிறது.

விசிக கூடாரம் காலி, திருமாவோடு இருந்தவர்கள் எல்லாம் வெளியேறி விட்டார்கள் என சொல்கிறார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தான் அந்த மாநாட்டில் 15 வயது முதல் 30 வயதிலான இளைஞர்கள் அதிகளவில் கூடியிருந்தார்கள். விஜய் வருகையால் விசிக வலிமை எந்தளவும் குறைந்து போகவில்லை. அந்த மாநாடு நடந்த மாலை விஜய் எனக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னார்.

அப்போது மிரட்டிட்டீங்க.. ஃபயர் சார்... ஃபயர் என சொன்னார். அடுத்த நாள் அவரை தலைமைச் செயலகத்தில் நான் பார்த்தபோதும் இதைத்தான் சொன்னார். மனம் திறந்து பாராட்டும் பெருந்தன்மை அவரிடத்தில் இருந்ததைப் பார்த்தேன். அவருக்கு வயிற்றெரிச்சல், போட்டி பொறாமை எதுவும் இல்லை. சமூக ஊடகங்களில் ஒரு கும்பல் திட்டமிட்டு இந்த 3 மாத காலமும் விசிகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் மிகப்பெரிய அரசியல் சதி இருக்கிறது. என்னுடைய தலைமைத்துவம் தமிழக அரசியலில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

வன்னி அரசுவை தமிழக அமைச்சரவையில் இடம்பெற செய்ததை எதிர் கும்பலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது விசிகவையும் மேலும் வலிமைப்படுத்தும். ஒடுக்கப்பட்ட மக்கள் பரிணாமம் பெறுவதை தடுத்தாக வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கமாகும். அதனால் தான் பாஜகவுக்கு ஏற்பட்ட சரிவு, திமுக இழந்த வாக்கு வங்கி, அதிமுகவுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி பற்றி பெரிதாக விவாதிக்கவில்லை. விஜய் வருகையால் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இதைப் பற்றி விவாதித்திருக்க வேண்டும். அதையெல்லாம் பேசாமல் விசிக பலவீனமடைந்தது பற்றி பேசுகிறார்கள். இந்த இயக்கம் நாளுக்கு நாள் வலிமை பெறுவதை உணர்ந்து தான் விசிகவையும், என்னையும் விமர்சிக்கிறார்கள்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கும் தமக்கும் அல்லது விசிக மீதும் எந்தவிதமான போட்டி மனப்பான்மையோ அல்லது பொறாமையோ இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இருப்பினும், எதிர்தரப்பினர் இது குறித்து தவறான விமர்சனங்களை முன்வைப்பதாக அவர் சாடியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு மலர் வெளியீட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார். உளுந்தூர்பேட்டை மாநாட்டின் போது தொண்டர்கள் நெடுஞ்சாலையில் நின்றதைக் கொண்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாகவோ அல்லது வன்முறை நடந்ததாகவோ கூறுவதை அவர் மறுத்தார். மேடைக்கு வந்த இளைஞர்களின் ஆர்வத்தை ஒழுங்கீனம் என விமர்சிப்பவர்களுக்கு அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.