PulseNews
லைஃப் ஸ்டைல்

Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?

ஆடி மாதத்தின் 4ம் ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 9ம் தேதியான இன்றைய நாளின் 12 ராசிகளுக்குமான பலன்களைப் பற்றி நாம் காணலாம்.

இன்றைய நாளின் பஞ்சாங்க விவரம்

நாள்: 09.08.2026 - சனிக்கிழமை

திதி: தேய்பிறை ஏகாதசி

நட்சத்திரம்: மதியம் 1.38 வரை மிருகசீரிஷம், அதன்பிறகு திருவாதிரை

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

குளிகை:

மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்:

காலை 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

ஆகஸ்ட் 9ம் தேதி ராசிபலன்கள்

மேஷம்

சுப காரிய முயற்சிகள் கைகூடி வரும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் மாற்றம் பிறக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

ரிஷபம்

தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பேச்சுகளில் அனுபவமும் பொறுமையும் வெளிப்படும்.

மிதுனம்

உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் ஏற்படும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். புதிய துறை சார்ந்த தேடல்கள் மனதில் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். மனதளவில் ஒரு விதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர் இடத்தில் கனிவு வேண்டும்.

கடகம்

கணவன் மனைவிக்கிடையே வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் நன்மையை தரும். சில நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பனிப்போர்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும்.

சிம்மம்

அலுவலகப் பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். தன வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள்.

கன்னி

தொழில் புதிய வாய்ப்புகள் மூலம் லாபம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். உயர்கல்வி குறித்த குழப்பம் விலகும்.

துலாம்

மனதளவில் இருந்த குழப்பங்கள் அகலும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும்.

விருச்சிகம்

செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பணி நிமித்தமான அவசர முடிவுகளை தவிர்க்கவும். உணவு விஷயங்கள் சற்று கவனத்துடன் இருக்கவும். வேலையாட்களிடம் மிதமான ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

தனுசு

சுபகாரிய தொடர்பான செலவுகள் ஏற்படும். மனதை உறுத்திய சில விஷயங்களில் இருந்து தெளிவு பிறக்கும். கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் நிமித்தமான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் உற்சாகம் ஏற்படும்.

மகரம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணம் அமையும். நினைத்த காரியம் கைகூடி வரும். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு சூழல் அமையும்.

கும்பம்

மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றத்தில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும்.

மீனம்

அரசு பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் சில சிக்கல்கள் குறையும்.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 9, 2026 சனிக்கிழமை அன்று தேய்பிறை ஏகாதசி திதி மற்றும் மிருகசீரிஷம் நட்சத்திரம் (மதியம் 1.38 வரை, பின் திருவாதிரை) கூடிய நாளில் 12 ராசிகளுக்கான பலன்கள் வெளியாகியுள்ளன. இந்நாளில் மேற்கு திசை சூலமாக உள்ளது. காலை 7.45 - 8.45 மற்றும் மாலை 3.15 - 4.15 நல்ல நேரமாகவும், மாலை 4.30 - 6.00 ராகு காலமாகவும், நண்பகல் 12.00 - 1.30 எமகண்டமாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ராசிபலன் கணிப்பின்படி, மேஷ ராசிக்கு சுப காரியங்கள் கைகூடி வரும் நிலையில், ஏனைய ராசிகளுக்கும் கிரக நிலைகளுக்கு ஏற்ப தொழில், குடும்பம் மற்றும் உத்தியோக ரீதியான பல்வேறு பலன்கள் மற்றும் கவனத்துடன் இருக்க வேண்டிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle