2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா அறிவித்துள்ளார். மாநில சுற்றுலாத்துறையின் சார்…

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா அறிவித்துள்ளார். மாநில சுற்றுலாத்துறையின் சார்பில் இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் நோக்கில் அரசால் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே இந்த விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது.
சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களைக் கௌரவிக்கும் வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.