சுதந்திரம் என்றால் கொடி மட்டும் அல்ல!
1757இல் தொடங்கிய பிரிட்டிஷ் ஆதிக்கம், 1858இல் நேரடி பிரிட்டிஷ் அரசு ஆட்சியாக மாறி, 1947 வரை நீடித்தது. ஒட்டுமொத்தமாக, சுமார் 190 ஆண்டுகள் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஆனாலும், விடுதலைக்காக முன்னோர்கள் பட்ட அடி, பெற்ற விழுப்புண், செய்த உயிர்த் தியாகம் ஆகியவை, சுதந்திரம் பெற்ற 80-வது ஆண்டிலும் இந்தியா முழுவதும் பெருமிதத்துடன் நினைவுகூரப்படுகின்றன. கொடி காத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன், அக்டோபர் 4, 1904 அன்று பிறந்து, பிரிட்டிஷ் காவல்துறையினரின் தாக்குதலில் ஜனவரி 11, 1932 அன்று உயிரிழந்தார். அவருடைய தியாகத்தை நினைவுகூரும் வகையில், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் குளோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிரிட்டிஷ் போலீசாரால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்த சம்பவத்தை நாடகமாக நிகழ்த்தினர். அப்போது...“உங்கள் சட்டத்தை உடைத்தெறியத்தான் இந்தப் போராட்டம்!. இமயம் முதல் குமரி வரை எங்கள் இந்திய மக்கள் கொதித்தெழுந்துவிட்டார்கள். கூடிய சீக்கிரம் கோட்டையிலே எங்கள் மூவர்ணக் கொடி பறக்கத்தான் போகிறது!. பயந்து வீட்டிலே பதுங்கிக் கிடக்க நாங்கள் என்ன கோழைகளா?. இந்த உடலுக்கு மட்டும் பல உயிர்கள் இருந்தால், இந்த நாட்டின் விடுதலைக்காக அடுத்தடுத்து கொடுத்துக் கொண்டே இருப்போம்! உயிரே போயினும் இந்தக் கொடியை விடமாட்டோம்! பாரத மாதாவுக்கு ஜே!” என்று திருப்பூர் குமரனாக நடித்த மாணவர், பிரிட்டிஷ் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், கையில் இருந்த தேசியக் கொடியை நெஞ்சோடு அணைத்தபடி வீர முழக்கமிடும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. அன்று உண்மையான திருப்பூர் குமரன், காவல்துறையின் கொடூரத் தாக்குதலுக்கு மத்தியிலும் தேசியக் கொடியைக் கைவிடாமல் உயிர்நீத்தார். அந்த வீரத் தியாகத்தை கண்முன்னே கொண்டுவந்த அந்த மாணவர்களின் நாடகத்தில் மீண்டும் உயிர்பெற்றார்... திருப்பூர் குமரன். இன்று நம் நாட்டில் தேசியக் கொடி உயர்ந்து பறக்கிறது. அதன் ஒவ்வொரு அசைவிலும், திருப்பூர் குமரன் மட்டுமல்ல... தேசத்தின் நாலாபுறமும் தங்கள் உயிரைத் தியாகம் செய்த எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் மூச்சும் கலந்திருக்கிறது. அந்தத் தியாகத்தை நினைவில் சுமந்து, தேசப்பற்றுடன் வாழ்வதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை!

1757-ல் தொடங்கிய பிரிட்டிஷ் ஆதிக்கம், 1858-ல் நேரடி அரசு ஆட்சியாக உருமாறி 1947 வரை நீடித்தது. ஒட்டுமொத்தமாக சுமார் 190 ஆண்டுகள் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்தது. இந்த நீண்ட கால அடிமைத்தளையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க நம் முன்னோர்கள் பட்ட துன்பங்களும், செய்த உயிர் தியாகங்களும் சுதந்திரம் அடைந்த 80-வது ஆண்டிலும் இன்றும் போற்றப்படுகின்றன.
கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன், 1904-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி பிறந்தார். பிரிட்டிஷ் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு எதிராக அவர் ஆற்றிய தியாகங்கள் இன்றும் தேசப்பற்றோடு நினைவு கூரப்படுகின்றன.