PulseNews
லைஃப் ஸ்டைல்

நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாக்பூர் தீக்க்ஷா பூமியில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் பங்கேற்ற பௌத்த மதத்தினை சேர்ந்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

தம்ம சக்கர பரிவர்தன திருவிழா

தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷ பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000/- வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.bcmbcmw.tn.gov.<wbr />in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ (5-வது தளம், அறை எண்-505) கட்டணமின்றி பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் - அனுப்பவேண்டிய முகவரி

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் - ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பராம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு 15.11.2026-க்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
PulseNews சுருக்கம்

நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன விழாவில் கலந்துகொண்டு திரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த பௌத்த மதத்தினர், தலா 5,000 ரூபாய் வரையிலான மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் இந்தத் திட்டத்தின் கீழ், மேற்படி விழாவில் பங்கேற்றவர்கள் மானியம் கோரி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle