கண்ணாடியின் பின்புறம் செதுக்கப்பட்ட சுதந்திர ஒளி: கோவையில் கலைஞர் யூ.எம்.டி. ராஜாவின் அசத்தல் படைப்பு
இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை வெகுவிமர்சையாகக் கொண்டாடும் வகையில், கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் யூ.எம்.டி. ராஜா, ஒரு வித்தியாசமான மற்றும் பிரமிக்க வைக்கும் கண்ணாடி ஓவியத்தைப் படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுவாகக் கண்ணாடியின் முன்புறம் ஓவியம் வரைவதே வழக்கம். ஆனால், இவர் முற்றிலும் மாறுபட்ட முறையில் கண்ணாடியின் பின்புறம் உள்ள பாதரசப் பூச்சைச் சிறிய, கூர்மையான பிளேடு கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கி இந்த நுட்பமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார். கண்ணாடியின் பின்புறம் செதுக்கப்பட்ட சுதந்திர ஒளி: கோவையில் கலைஞர் யூ.எம்.டி. ராஜாவின் அசத்தல் படைப்பு #coimbatore #art pic.twitter.com/JzCxA7UDwH — Indian Express Tamil (@IeTamil) August 14, 2026 இந்த ஓவியத்தில், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவம் மிகத் துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நமது நாட்டின் எல்லையைக் காக்கும் இந்திய ராணுவ வீரர் ஒருவர், தேசியக் கொடியைக் கையில் ஏந்தி சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் காட்சியும், "80-வது சுதந்திர தினம்" என்ற வாசகமும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தியாகங்கள் பல செய்து நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தேசத் தலைவர்களை நினைவு கூர்வதற்கும், நாம் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்குமே இந்தப் படைப்பை உருவாக்கியதாகக் கலைஞர் ராஜா தெரிவித்துள்ளார். கண்ணாடியின் பின்புறம் செதுக்கப்பட்ட இந்த ஓவியத்தைச் சூரிய ஒளிக்கதிர்களின் பிம்பத்தில் காட்டும்போது, அது ஒளி ஊடுருவிப் பிரகாசிக்கும் காட்சி காண்போரைக் பரவசத்தில் ஆழ்த்துகிறது. நாட்டின் சுதந்திர தின மகிழ்ச்சியைத் தனது தனித்துவமான கலைத்திறன் மூலம் வெளிப்படுத்தியுள்ள கலைஞரின் இந்த முயற்சிக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த நுண்கலைஞர் யூ.எம்.டி. ராஜா வித்தியாசமான கண்ணாடி ஓவியம் ஒன்றை உருவாக்கி அனைவரையும் கவர்ந்துள்ளார். வழக்கமான ஓவியங்களுக்கு மாறாக, இவர் கண்ணாடியின் பின்புறம் உள்ள பாதரசப் பூச்சைச் சிறிய கூர்மையான பிளேடு கொண்டு செதுக்கி இந்த நுணுக்கமான கலைப்படைப்பை வடிவமைத்துள்ளார்.