PulseNews
லைஃப் ஸ்டைல்

கால்களால் எழுதிப் படிக்கும் பீகார் மாற்றுத்தினாளி சிறுமி; 13 வயது லக்ஷ்மியின் நெகிழ்ச்சிக் கதை: வைரல் வீடியோ

13 வயதான லக்ஷ்மி, மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும் தனது கல்வியைத் தொடர்வதில் குறிப்பிடத்தக்க மனஉறுதியைக் காட்டி வருகிறார். பீகாரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் இவர், எழுதுவது உட்பட அன்றாடப் பள்ளிப் பணிகளைச் செய்ய தனது கால்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்தில் படிக்க: ஏ.என்.ஐ செய்தி நிறுவனம்பகிர்ந்த வீடியோவில், லக்ஷ்மி தனது அன்றாடப் பணிகளைச் சுயமாகச் செய்வதைக் காண முடிகிறது. தனது பள்ளிப் பையுடன் அமர்ந்திருக்கும் அவர், தனது கால்களைப் பயன்படுத்தி அதைத் திறந்து, நோட்டுப் புத்தகம் மற்றும் பேனாவை வெளியே எடுத்து, பக்கங்களை மாற்றி எழுதத் தொடங்குகிறார். லக்ஷ்மியைப் பொறுத்தவரை, வகுப்பறையின் எளிய செயல்பாடுகளுக்குக் கூட ஒரு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. தனது பள்ளிப் பை மற்றும் படிப்புப் பொருட்களைக் கையாள்வது முதல் பக்கங்களைத் திருப்புவது மற்றும் பேனாவைப் பிடிப்பது வரை, அவர் ஒவ்வொரு பணியையும் தனது தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டுள்ளார். இப்பணிகளைச் சுயமாக நிர்வகிக்கும் அவருடைய திறன், உடல் ரீதியான சவால்கள் இருந்தபோதிலும் படிப்பில் ஈடுபடவும் பள்ளிக்குச் செல்லவும் அவருக்கு உதவுகிறது. மற்ற மாணவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பணிகளுக்கு எவ்வளவு கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது என்பதையும் இந்த வீடியோ உணர்த்துகிறது. வீடியோவைப் பாருங்கள்: #WATCH | Katihar, Bihar: A 13-year-old girl, Lakshmi, with disabilities overcomes physical limitations to write with her feet and pursue her education. pic.twitter.com/80Cow4QWar — ANI (@ANI) August 13, 2026 இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பல சமூக ஊடகப் பயனர்கள் லக்ஷ்மியின் கவனத்தையும் மனஉறுதியையும் பாராட்டி வருகின்றனர். "கல்விக்கான நிதி ஒதுக்கீடு வளர்ந்த நாடுகளுக்கு இணையானதாக இருக்க வேண்டும் என்பதற்கு இதுவே சான்று. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தனி கவனம் செலுத்துவது, அவர்கள் சமத்துவத்தின் அடிப்படையில் போட்டியிட உதவும்" என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். "அவர் கால்களால் எழுத வேண்டிய நிலை இருக்கும்போது தொழில்நுட்பத்தால் என்ன பயன்? பீகார் அரசு அவருக்கு ஒரு ஸ்மார்ட் டேப் வழங்கி, அதில் 'பேச்சை எழுத்தாக மாற்றும்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது மிகவும் மரியாதைக்குரியதாக இருக்கும்; மேலும் பீகார் அரசு தொழில்நுட்பத்தில் ஆர்வமாகவும் கல்வியில் தீவிரமாகவும் இருப்பதை வெளிப்படுத்தும்" என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். "லக்ஷ்மியின் மனஉறுதி உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது! சவால்கள் நம்மைச் சோதிக்கக்கூடும், ஆனால் அவை நம் கனவுகளைத் தீர்மானிக்க முடியாது என்பதை அவருடைய தைரியம் நமக்கு நினைவூட்டுகிறது" என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கால்களால் எழுதிப் படிக்கும் பீகார் மாற்றுத்தினாளி சிறுமி; 13 வயது லக்ஷ்மியின் நெகிழ்ச்சிக் கதை: வைரல் வீடியோ
PulseNews சுருக்கம்

பீகாரைச் சேர்ந்த 13 வயது லக்ஷ்மி என்ற மாற்றுத்திறனாளி சிறுமி, தனது மனஉறுதியால் கல்வியைத் தொடர்ந்து வருகிறார். அங்குள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் அவர், எழுதுவது உள்ளிட்ட அன்றாடப் பள்ளிப் பணிகளைத் தனது கால்களையே பயன்படுத்திச் செய்யக் கற்றுக்கொண்டுள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளியில், லக்ஷ்மி தனது பள்ளிப் பையைத் திறந்து, கால்களால் சுயமாகப் பணிகளைச் செய்யும் நெகிழ்ச்சியான காட்சிகள் பதிவாகியுள்ளன. உடல் ரீதியான சவால்களைக் கடந்து அவர் கல்வி கற்கும் விதம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle