மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் அவர்களுக்கு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது பணிவான வணக்கங்களையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்த் திரையுலகின் பெருமையை உலக அளவில் உயர்த்திய இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள தேனியில் தமிழக அரசின் சார்பில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று எங்களது கோரிக்கையை தங்களிடம் முன்வைத்திருந்தோம். எங்களது கோரிக்கையை கனிவுடன் ஏற்று, இயக்குநர் [...]
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்த் திரையுலகின் பெருமையை உலகறியச் செய்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நினைவைப் போற்றும் வகையில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள தேனியில் தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சங்கம் முன்வைத்திருந்தது.
திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்காக முதலமைச்சருக்குத் திரையுலகினர் தங்கள் மனமார்ந்த வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.