PulseNews
லைஃப் ஸ்டைல்

42 ஆண்டுகளுக்கு பிறகு புருனேயில் சுற்றி திரிந்த குரூப்; புகைப்படத்தால் ஏற்பட்ட திருப்பம்: மீண்டும் தலை தூக்கும் மர்மம்

எழுதியவர்: சஜு பிலிப் 1984- ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று, தனது 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக, சுகுமார குரூப் என்பவர் முன் பின் தெரியாத ஒரு நபரை கழுத்தை நெரித்துக் கொன்று, தனது காரின் டிரைவர் இருக்கையில் அமர்த்தி, ஆலப்புழாவில் உள்ள ஒரு நெல் வயலில் வைத்து காரை கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் பல ஆண்டுகளாக காவல் துறையிடம் இருந்து தப்பித்து வந்த நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘குரூப்’ திரைப்படத்திற்குப் ஊக்கமாக அமைந்ததுமான இந்த வழக்கு, அவர் புருனையில் காணப்பட்டதாக ஒரு தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 17 கோடி கேரட் வைரம்: தங்கத்துக்கு பின்னாடி போறத விட்டு விட்டு; இந்த நாட்டுக்கு போய் வைரத்த அள்ளிட்டு வாங்க குற்றம் நடந்த காலத்தில் 30-களின் பிற்பகுதியில் இருந்த குரூப், இந்நேரம் இறந்திருக்கக்கூடும் என்ற யூகத்தின் அடிப்படையில், குற்றப்பிரிவு காவல்துறை இவ்வழக்கை முடிக்க இருந்த நேரத்தில் வெளியான இந்த செய்தி, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்து ஊடகங்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, இந்த அறிக்கைகளைச் சரிபார்க்க வேண்டும் என்று கூறினார். “இது தொடர்பாகச் சில வதந்திகள் பரவி வருகின்றன. இந்தச் செய்தி குறித்து விசாரிக்குமாறு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி (குற்றப்பிரிவு) எச். வெங்கடேஷிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். உண்மைகளைக் கண்டறிய மாநில காவல்துறை இன்டர்போலை அணுகும்” என்று அவர் தெரிவித்தார். 1984-ன் சாக்கோ கொலை வழக்கு கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள சிறியநாடு கிராமத்தைச் சேர்ந்த குரூப், அபுதாபியில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கொலை நடந்த சமயத்தில் அவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். 1984 ஜனவரி 21 அன்று, குரூப்தனது மைத்துனரான பாஸ்கர பிள்ளை உட்பட மூன்று கூட்டாளிகளின் உதவியுடன், கே.ஜே. சாக்கோ என்ற 31 வயது நபரை கடத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. குரூப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு நபரைத் தேடிக்கொண்டிருந்தபோது, திரைப்பட விநியோக நிறுவனத்தின் பிரதிநிதியான சாக்கோ, வீட்டிற்குச் செல்ல அவர்களிடம் லிஃப்ட் கேட்டுள்ளார். அவருக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்தது, மேலும் அவரது மனைவி சாந்தம்மா ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து பிறந்த அவரது மகன் ஜிதின், தனது தாயாருடன் சேர்ந்து இன்னமும் நீதிக்காகக் காத்திருக்கிறார். சாக்கோவைக் கடத்தி கொன்ற அந்தக் கும்பல், பின்னர் குரூப்புக்கு சொந்தமான காரை ஆலப்புழாவின் மாவேலிக்கரா காவல் எல்லைக்குட்பட்ட ஒரு வயலில் வைத்துத் தீயிட்டுக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. காவல்துறை அவரைப் பார்த்தபோது, சடலம் அடையாளமே தெரியாத அளவுக்கு எரிந்திருந்தது. சம்பவ இடத்தில் காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் தீப்பெட்டி, ரப்பர் கையுறை மற்றும் பலரின் கால்தடங்கள் போன்ற பல தடயங்கள் கிடைத்தன. அவை பிற நபர்களின் இருப்பைச் சுட்டிக்காட்டின. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையே மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது; அந்த நபர் காரைக் கொளுத்துவதற்கு முன்பே கொல்லப்பட்டதை அது காட்டியது, ஏனெனில் அவரது நுரையீரலில் சாம்பலோ அல்லது புகையோ இல்லை. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க இருப்பினும், இறந்தது குரூப் தான் என்று காவல்துறை நம்பியதால், அவருக்கு இறுதிச்சடங்கும் செய்யப்பட்டது. அதன்பிறகுதான் அடுத்த திருப்பம் நிகழ்ந்தது. காரில் வீட்டிற்குச் செல்ல லிஃப்ட் கேட்ட சாக்கோதான் இறந்தவர் என்பது தெரியவந்தது. தேடுதல் வேட்டை தொடர்ந்து, குரூப் உயிருடன் இருப்பதையும் கொச்சியில் தங்கியிருந்ததையும் காவல்துறை கண்டறிந்தது. அவருக்கு 8 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு இருந்ததையும் அவர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் காவல்துறை அவரை பிடிப்பதற்குள் குரூப் தப்பி ஓடிவிட்டார். இருப்பினும் அவரது நண்பர்களான மைத்துனன் பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன் மற்றும் ஷாஹு ஆகிய மூவரையும் காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஷாஹு அரசுத் தரப்பு சாட்சியாக மாறினார், மற்ற இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையில், குரூப்பிற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இந்தியாவின் பிற மாநில காவல் துறைகள் அணுகப்பட்டன, இன்டர்போல் எச்சரிக்கப்பட்டது, ஆனால் இந்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை. பின்னர், 1988-ல், குருப்பை பார்த்ததாக கூறப்படும் ஒரு தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது. குரூப்பின் சொந்த கிராமமான சிறியநாட்டைச் சேர்ந்த ஒரு இளம் செவிலியர், பொகாரோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவரைப்போல் தோற்றமளிக்கும் ஒரு நபரைப் பார்த்ததாகக் கூறினார். அந்த நபர் இதய நோய் இருப்பதாகக் கூறி 'ஜோஷி' என்ற பெயரில் சிகிச்சைக்கு வந்திருந்தார். இருப்பினும், அவர் மருத்துவமனையிலிருந்து தலைமறைவானது தெரியவந்தது. தொலைக்காட்சி சேனல் காட்டியது எ ன்ன? வியாழக்கிழமையன்று, மலையாள செய்தி சேனலான 24 நியூஸ் (24News), குரூப் புருனையில் இருப்பதாக கூறியது. குரூப் ஒரு "போலிப் பெயரில்" வாழ்ந்து வருகிறார், கட்டுமானத் துறையில் பணிபுரிகிறார், யாரிடமும் அதிகமாகப் பேசுவதில்லை, ஆனால் அவரது "பேச்சு உச்சரிப்பு" அவர் குரூப்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை அங்குள்ள சில மலையாளிகளுக்கு ஏற்படுத்தியதாக அந்தச் சேனல் கூறியது. தொடர்ந்து, அந்த சேனல் குரூப் என்று கூறப்படும் ஒரு முதியவரின் புகைப்படத்தை ஒளிபரப்பியது. இந்த வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும், தப்பியோடிய நபர் உயிருடன் இருக்கிறார், குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதன் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டது. டிவி சேனல் காட்டிய அந்த முதியவரின் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று, செய்திச் சேனல் காட்டிய புகைப்படத்தில் உள்ள நபர், 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்குச் சென்ற தங்கள் உறவினரான தாமோதர மேனன் என்று திருச்சூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தெரிவித்ததால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. "அவர் மலேசியாவில் தன் குடும்பத்துடன் குடியேறிவிட்டார்" என்று அவரது தம்பி கருணாகர மேனன் தெரிவித்தார். திருச்சூரில் உள்ள அந்த குடும்பத்தை சந்தித்த ஒரு காவல்துறை அதிகாரியும், புகைப்படத்தில் உள்ள நபர் தாமோதர மேனன் தான் என்பதை முதற்கட்டமாக உறுதிப்படுத்தினார். அவர் இப்போது உடல்நலம் சரியில்லாமல் புருனையில் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், புருனையில் உள்ள இந்திய தூதரகம், தாமோதர மேனனின் அவல நிலை குறித்து வெளிநாடு வாழ் கேரளவாசிகளுக்கான கேரள அரசுத் துறையான நோர்க்கா ரூட்ஸிடம் (NORKA ROOTS) எடுத்துரைத்து, அவர்களின் உதவியை கோரியது. கடந்த மாதம், நோர்க்கா இந்த விஷயத்தை கேரள அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
42 ஆண்டுகளுக்கு பிறகு புருனேயில் சுற்றி திரிந்த குரூப்; புகைப்படத்தால் ஏற்பட்ட திருப்பம்: மீண்டும் தலை தூக்கும் மர்மம்
PulseNews சுருக்கம்

1984-ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று, தனது 8 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகையை அடைய, தெரியாத நபர் ஒருவரை கொலை செய்து காரில் வைத்து எரித்ததாக சுகுமார குரூப் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆலப்புழாவில் நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பல ஆண்டுகளாகக் காவல்துறைக்குச் சிக்காமல் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

சுகுமார குரூப்பின் இந்த வழக்கு மற்றும் அவர் தலைமறைவாக இருந்தது குறித்த நிகழ்வுகள், 2021-ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘குரூப்’ திரைப்படத்திற்கு அடிப்படையாக அமைந்தது. தற்போது, 42 ஆண்டுகளுக்குப் பிறகு புருனேயில் அவர் சுற்றித் திரிவதாக வெளியான புகைப்படம் ஒன்று, இந்த மர்ம வழக்கை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle