PulseNews
லைஃப் ஸ்டைல்

விஜய்யின் மைண்ட் ஸ்பேஸ்: ஃபிட்னஸ் உலகை ஆளும் உடற்பயிற்சி; ரவி மோகன் சொன்ன சீக்ரெட்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரவி மோகன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பகத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ரவி பாக்சிங் பயிற்சி செய்வது போன்ற அந்த வீடியோவின் கேப்ஷனில் ”விஜய் அண்ணாவின் மைண்ட்ஸ்பேஸ்" என்று எழுதியிருந்தார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க ஆலோசனை உணவு நிபுணரும் உடற்பயிற்சி பயிற்சியாளருமான கரிமா கோயலின் கூற்றுப்படி, பாக்சிங் என்பது ஃபங்ஷனல் ஃபிட்னஸின் (functional fitness) மிகவும் பிரபலமான வடிவங்களில் ஒன்றாக மாறியுள்ளது. "பலர் பாக்சிங்கை சண்டை விளையாட்டுகளுடன் தொடர்புபடுத்தினாலும், ஃபிட்னஸ் பாக்சிங் என்பது வலிமை, சகிப்புத்தன்மை, சுறுசுறுப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை இணைக்கும் ஒரு முழு உடல் உடற்பயிற்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என்றார். மருத்துவக் கண்ணோட்டத்தில், பாக்சிங் என்பது ஒரு உயர்- தீவிரம் கொண்ட உடற்பயிற்சியாகும். இது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய தசைகளையும் ஈடுபடுத்துகிறது. "குத்துவது தோள்கள், மார்பு, கைகள், முதுகு மற்றும் கோர் (core) பகுதியை செயல்படுத்துகிறது, அதே நேரத்தில் தொடர்ச்சியான கால் நகர்வுகள் (footwork) குளுட்ஸ், குவாட்ரிசெப்ஸ், ஹாம்ஸ்ட்ரிங்ஸ் மற்றும் கணுக்கால் தசைகளுக்கு சவாலாக அமைகின்றன. திருப்புதல் மற்றும் சுழற்சி நகர்வுகளும் கோர் பகுதியை வலுப்படுத்துகின்றன, சமநிலையை மேம்படுத்துகின்றன மற்றும் ஒருங்கிணைப்பை அதிகரிக்கின்றன. அதே நேரத்தில், பாக்சிங்கின் வேகமான தன்மை ஒரு சிறந்த இருதய உடற்பயிற்சியை வழங்குகிறது, இது இதய ஆரோக்கியம், சகிப்புத்தன்மை மற்றும் கலோரி செலவினங்களை மேம்படுத்துகிறது" என்று கோயல் கூறினார். உடற்பயிற்சி வழக்கத்தில் பாக்சிங்கை இணைப்பதன் மற்றொரு நன்மை, நேரம், வேகம் மற்றும் மனக் கவனத்தின் மீதான அதன் தாக்கமாகும். "பஞ்ச் சேர்க்கைகளைக் கற்றுக்கொள்வது மற்றும் கால் நகர்வுகளைப் பராமரிப்பது ஆகியவற்றுக்குக் கவனமும் விரைவான முடிவெடுக்கும் திறனும் தேவைப்படுகின்றன. இது பாக்சிங்கை உடல் மற்றும் மூளை ஆகிய இரண்டிற்குமான ஒரு உடற்பயிற்சியாக மாற்றுகிறது. உயர் தீவிர குத்து பயிற்சிகள் எண்டார்பின்களை (endorphins) வெளியிடவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுவதால், இது ஒரு பயனுள்ள மன அழுத்த நிவாரணியாகவும் இருக்கும்” என்றார். View this post on Instagram A post shared by Ravi Mohan (@iam_ravimohan) ஆனால் உடல் நன்மைகளுக்கு அப்பால், பாக்சிங் மன நலனுக்கான ஒரு சக்திவாய்ந்த காரணியாகும். "விழிப்புடன் இருப்பது, நகர்வுகளை எதிர்பார்ப்பது போன்றவை கவனத்தை அதிகரிக்கிறது மற்றும் கை - கண் ஒருங்கிணைப்பையும் கூர்மைப்படுத்துகிறது. உடற்பயிற்சியின் தீவிரம் மன அழுத்தத்தை வெளியிடவும், நம்பிக்கையை அதிகரிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த மீள்தன்மையை ஒரே நேரத்தில் மேம்படுத்தவும் ஒரு ஆரோக்கியமான வழியை வழங்குகிறது. பாக்சிங் என்பது கடுமையாக குத்துவதை பற்றியது அல்ல. இது துல்லியம், தோரணை (posture), சுவாசம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நகர்வு பற்றியது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பாக்சிங் செய்வது, சரியான வழிகாட்டுதலுடன் மற்றும் சீரான உடற்பயிற்சி முறையின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படும்போது, ஒட்டுமொத்த உடற்பயிற்சி, தடகள செயல்திறன் மற்றும் மனக் கூர்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இது உடலையும் மனதையும் தூண்டும் ஒரு ஈர்க்கக்கூடிய உடற்பயிற்சியாகும், மேலும் ஃபங்ஷனல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கும் அதே வேளையில் வழக்கமான ஜிம் வழக்கத்திலிருந்து விலகிச் செல்ல விரும்புவர்களுக்கு இது உகந்தது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விஜய்யின் மைண்ட் ஸ்பேஸ்: ஃபிட்னஸ் உலகை ஆளும் உடற்பயிற்சி; ரவி மோகன் சொன்ன சீக்ரெட்
PulseNews சுருக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்சிங் பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், "விஜய் அண்ணாவின் மைண்ட்ஸ்பேஸ்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உடற்பயிற்சி பயிற்சியாளரான கரிமா கோயல் கருத்துப்படி, பாக்சிங் என்பது தற்போதைய காலத்தில் மிகவும் பிரபலமான ஃபங்ஷனல் ஃபிட்னஸ் பயிற்சியாக உருவெடுத்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle