9 வருஷமா நம்பர் 1 நாடு... உலகின் பாதுகாப்பான டெஸ்டினேஷனை விட்டு விட்டு; இந்தியா வந்த தம்பதி
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாகத் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ள பின்லாந்து நாட்டை விட்டு, ஒரு ஃபின்னிஷ் குடும்பம் தங்களது இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவின் மும்பை நகரத்திற்குச் சமீபத்தில் குடியேறியுள்ளது. நடன ஆசிரியரான ஜானிகா டியூனைனன் மற்றும் அவரது கணவர் தோகோ ஆகியோரே இந்த அதிரடி முடிவை எடுத்த தம்பதி ஆவர். 80 டிகிரி சூட்டுல வியர்க்க வியர்க்க குளியல்... காரை விட இதுதான் அதிகம்; உலகின் ஹேப்பி நாட்டில் இப்படி ஒரு விஷயமா? வாழ்க்கை திருப்திப் புள்ளிகளில் 10-க்கு 7.7 புள்ளிகள் பெற்று, உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடாகக் கருதப்படும் பின்லாந்தை விட்டு இவர்கள் ஏன் இந்தியா வந்தார்கள் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இவர்கள் இதற்கு முன்பு ஒருமுறை கூட இந்தியாவிற்கு வந்து பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிக மகிழ்ச்சியான நாட்டை விட்டு வெளியேறியது ஏன்? எங்கள் குழந்தைகள் உலகத்தைப் பற்றி ஒரே ஒரு கோணத்தில் மட்டும் பார்த்து வளரக் கூடாது என்று நாங்கள் விரும்பினோம். புதிய மனிதர்கள், புதிய கலாச்சாரம் மற்றும் முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை முறையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியா செல்ல முடிவு செய்தோம் என்று அவர்கள் கூறினர். வேலை வாய்ப்பு இவர்கள் பின்லாந்தை விட்டு வெளியேறத் திட்டமிட்ட அதே நேரத்தில், கணவர் தோகோவிற்கு இந்தியாவில் ஒரு ஆசிரியர் பணி கிடைத்தது. இந்திய நாட்டின் வளமான மற்றும் பன்முகத்ன்மை கொண்ட கலாச்சாரமும், இங்குள்ள மக்களின் அன்பும்தான் தங்களை அதிகம் ஈர்த்ததாகத் தெரிவித்தனர். View this post on Instagram A post shared by The Findian Family | Touko, Janika & The Crew (@thefindianfamily) மும்பையில் புதிய தொடக்கம் - அனுபவங்கள் ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் இந்த ஃபின்னிஷ் குடும்பம் மும்பையை வந்தடைந்தது. விமான நிலையத்தில் இறங்கிய அவர்களுக்கு கடுமையான பருவமழை மூலமாக 'சிறப்பான வரவேற்பு' கிடைத்தது. மும்பைக்கு வந்து இறங்கிய இரண்டாவது நாளிலேயே தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளையும் அங்குள்ள பள்ளியில் சேர்த்தனர். பள்ளியின் கட்டமைப்பு மற்றும் ஊழியர்களின் அன்பான வரவேற்பு தங்களை நெகிழ வைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். மும்பை வாழ்க்கை அனுபவம் தெரு ஓரங்களில் 'வடா பாவ்' (Vada Pav) சாப்பிடுவது, முதன்முறையாக ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்வது எனத் தங்களது அன்றாடப் பயணத்தை அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறார்கள். மொழித் தடையும், மும்பையின் கடுமையான டிராஃபிக் நெரிசலும் சவாலாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் காட்டும் அளப்பரிய அன்பும் கருணையும் தங்களைச் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வைத் தருவதாக இக்குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளாக உலகின் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தில் உள்ள பின்லாந்தை விட்டுவிட்டு, ஜானிகா டியூனைனன் மற்றும் அவரது கணவர் தோகோ ஆகியோர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் மும்பைக்குக் குடிபெயர்ந்துள்ளனர். நடன ஆசிரியரான ஜானிகா மற்றும் அவரது கணவர் எடுத்த இந்த அதிரடி முடிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வாழ்க்கை திருப்தி குறியீட்டில் 10-க்கு 7.7 புள்ளிகளைப் பெற்ற மகிழ்ச்சியான நாட்டை விட்டு வந்த இந்த தம்பதியினர், இந்தியாவில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை எதிர்கொண்டு வருகின்றனர். உலகத்தரம் வாய்ந்த சூழலில் வாழ்ந்து வந்தவர்கள், இந்தியாவின் சூழலுக்கு மாறியுள்ள விதம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.