ஒரு நாளைக்கு 20 மணி நேரம் விரதம், ஒருவேளை சாப்பாடு; புற்றுநோயில் இருந்து மீண்ட நடிகை சோனாலி பிந்த்ரே டயட் ப்ளான்
காதலர் தினம் படத்தின் மூலம் 90-ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே, 4-ம் கட்ட மெட்டாஸ்டேடிக் புற்றுநோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அதில் உடற்பயிற்சியுடன் சேர்த்து தான் விரதமும் (Fasting) இருந்து வருவதாக நடிகை வெளிப்படுத்தியுள்ளார். இதில் பேசிய அவர், "நான் 18 முதல் 20 மணி நேரம் வரை விரதம் இருக்கிறேன். ஒரு நாளில் ஒன்றரை வேளை மட்டுமே உணவு உண்கிறேன்," என்று 'மேஷபிள் இந்தியா'விற்கு அளித்த பேட்டியில் சோனாலி கூறினார். புற்றுநோயிலிருந்து மீண்ட ஒருவராக, உணவுமுறையின் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்புவது இயல்பானது தான். ஆனால், நீண்ட நேரம் இடைவிடாத விரதம் (Intermittent Fasting) இருப்பது புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு நன்மை பயக்குமா? "ஆரோக்கியமான மனிதர்களில் உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கவும் இது உதவக்கூடும். ஆனால், புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் விஷயத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்," என்று தலேகாவிலுள்ள டி.ஜி.ஹெச் ஆன்கோ லைஃப் கேன்சர் சென்டரின் (TGH Onco Life Cancer Centre) கன்சல்டன்ட் ரேடியேஷன் ஆன்காலஜிஸ்ட் டாக்டர் ஜோதி மேத்தா கூறியுள்ளார். மும்பை சென்ட்ரலில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையின் (Wockhardt Hospital) கன்சல்டன்ட் ஆன்கோ-சர்ஜன் டாக்டர் மேகல் சங்கவி கூறுகையில், புற்றுநோயிலிருந்து மீண்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான டயட் பிளான் (Diet Plan) கிடையாது என்கிறார். தனிப்பட்ட ஊட்டச்சத்து தேவைகள் புற்றுநோயின் வகை, அவர்கள் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள், குணமடையும் கட்டம், உடல் எடை, தசை நிறை (Muscle Mass), ஒட்டுமொத்த ஆரோக்கியம்,வயது மற்றும் பிற வாழ்க்கை முறை நோய்கள் ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவரின் ஊட்டச்சத்து தேவைகளும் மாறுபடும். சிலரால் இடைவிடாத விரதத்தை எளிதாகக் கையாள முடியும், ஆனால் நீண்ட நேர விரதம் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. சில சந்தர்ப்பங்களில், இது உடலுக்குத் தேவையான கலோரிகளும் புரதச்சத்தும் கிடைக்காமல் போவதற்கும், சோர்வு, தசை இழப்பு மற்றும் உடல் குணமடைவதில் தாமதம் ஏற்படுவதற்கும் காரணமாக அமையலாம் என்று டாக்டர் சங்கவி மேலும் கூறினார். மேலும், நீரிழிவு நோய் உள்ளவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கல்லீரல் நோய் உள்ளவர்கள் நீண்ட நேர உபவாசத்தைத் தவிர்ப்பது நல்லது என்றும், அது ஆரோக்கியக் குறைபாடுகளை ஏற்படுத்தவோ அல்லது ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதைத் தடுக்கவோ வாய்ப்புள்ளது என்றும் டாக்டர் சங்கவி தெளிவுபடுத்துகிறார். புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு, உடல் மீண்டெழுவதற்கும், தசைகளைத் தக்கவைப்பதற்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதற்கும் நல்ல ஊட்டச்சத்து அவசியமாகும். முறையான திட்டமிடல் இல்லாமல் நீண்ட நேரம் உபவாசம் இருப்பது உடல் எடை குறைவதற்கும், சோர்வுக்கும், புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும். இது குணமடையும் செயல்முறையை மேலும் கடினமாக்கும்," என்று டாக்டர் மேத்தா குறிப்பிடுகிறார்.

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →