“இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள் இந்துவாக இருக்க முடியாது” – மோகன் பகவத்
இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள் உண்மையான இந்துக்களாக இருக்க முடியாது என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவரையும் சமமாக நடத்துவதே இந்துத்துவத்தின் அடிப்படை கொள்கை என வலியுறுத்தினார். மேலும், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தங்களின் கர்ம பூமியான அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார். அதேநேரத்தில், தங்களின் ஜென்ம பூமியான இந்தியாவுக்காக ஏதாவது செய்ய விரும்பினால், இந்தியாவின் பாரம்பரிய விழுமியங்களையும் பண்பாட்டு மதிப்புகளையும் தங்களது வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக்கூடாது என்று கருதுபவர்கள் உண்மையான இந்துக்களாக இருக்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், அனைவரையும் சமமாக நடத்துவதே இந்துத்துவத்தின் அடிப்படை கொள்கை என்பதை வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தாங்கள் வாழும் இடமான அமெரிக்காவிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில், தங்கள் பிறந்த மண்ணான இந்தியாவுக்காக ஏதேனும் பங்களிக்க விரும்புபவர்கள் அதற்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம் என்றும் மோகன் பகவத் குறிப்பிட்டார்.