தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
தூத்துக்குடி: மகளிர் கல்லூரியில் மாணவிகள் ஓணம் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.கேரளாவில் ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், தூத்துக்குடி, புது கிராமத்தில் உள்ள ஹோலி கிராஸ் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு அனைத்து வித மலர்களைக் கொண்டு அத்தப்பூ கோலமிடும் போட்டி, கேரளா பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டி, மற்றும் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்த மாணவிகளின் ஆடை அலங்கார போட்டிகள் நடைபெற்றன.இதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் நடனமும் ஆடினர். இதில் கல்லூரியில் படிக்கக்கூடிய 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பாரம்பரிய கேரள முறைப்படி ஆடை அணிந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.மேலும்,அனைத்து வித பண்டிகைகளுக்கும் ஜாதி, மதம், மொழி கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் தாங்கள் உற்சாகமாக கேரள மாநில பண்டிகையான ஓணம் பண்டிகையை கொண்டாடியதாக கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தூத்துக்குடி புதுக்கிராமத்தில் உள்ள ஹோலி கிராஸ் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கேரளாவில் ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், முன்னதாகவே இக்கல்லூரி மாணவிகள் இவ்விழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த விழாவையொட்டி, கல்லூரியில் மாணவிகளுக்கான அத்தப்பூ கோலமிடும் போட்டி மற்றும் கேரள பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், கேரளாவின் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்த மாணவிகள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.