PulseNews
லைஃப் ஸ்டைல்

இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் ‘கலைஞர் கருத்தரங்கு மையம்’ கட்டப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் இது தொடர்பாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தானம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “வேம்படியான் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து ‘கலைஞர் கருத்தரங்கு மையம்’ கட்டப்படுகிறது. எனவே கட்டுமானத்தை அகற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (25.08.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில், “கோயில் நிலத்தை ஆக்கிரமித்து எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை” என விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதிக்கு (08.09.2026) ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
PulseNews சுருக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் வேம்படியான் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, ‘கலைஞர் கருத்தரங்கு மையம்’ கட்டப்படுவதாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரி அவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட இடத்தில் கோயில் நிதியைக் கொண்டு கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை என இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இது குறித்து உரிய பதிலளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle