சிப்காட் சார்பில் புதுக்கோட்டை ஏம்பலில் புதிய ஜவுளி பூங்கா அமைக்க திட்டம்..!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் ஏம்பல் பகுதியில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த்துள்ளது. இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏம்பல் பகுதியில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்படுகியது. இதனால், உள்ளூரில் நிரந்தரமான வருமானம் இல்லை. அதன் காரணமாக இப்பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என கடந்த 02 ஆண்டுகளாகத் தமிழக அரசிடம் நேரிலும், மனுக்கள் வாயிலாகவும் வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கையின்போது, சிப்காட் நிறுவனம் ஜவுளித் தொழில் கூட்டமைப்புடன் இணைந்து ஏம்பல் அருகில் திரப்பிடங்கியில் ரூ.25 கோடியில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் எஸ்.கீர்த்தனா அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஏம்பல் மக்கள் வரவேற்பளித்துள்ளனர். இது குறித்து ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.பேரின்பநாதன் கூறியதாவது: ஏம்பல் பகுதி மக்களுக்கு உள்ளூரில் போதிய வேலைவாய்ப்பு கிடைக்காததால் வெளி மாவட்டங்களுக்குச் செல்கின்றனர். இதனால், இவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம். தற்போது ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது இப்பகுதி பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சிப்காட் நிர்வாகத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் ஏம்பல் பகுதியில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காவை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சிப்காட் சார்பில் அமையவுள்ள இந்தத் திட்டத்தினால் அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏம்பல் பகுதியில் வடகிழக்குப் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் நடைபெறுவதால், அங்கு நிலையான வருமானம் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனை உணர்ந்த உள்ளூர் மக்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுக்கு அளித்த கோரிக்கைகளின் பலனாக தற்போது இந்த ஜவுளிப் பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது.