PulseNews
லைஃப் ஸ்டைல்

கொடியேற்ற விழாவில் குவிந்த பக்தர்கள் : ஒருவர் மயக்கம்!

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 54வது ஆண்டு திருவிழாவானது, கொடியேற்ற நிகழ்ச்சியுடன் இன்று (29.08.2026) மாலை தொடங்கியது. இந்த கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு ஆலயத்திற்கு வரும் அனைத்து சாலைகளிலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். ஆலயத்திற்குள் வருபவர்களும், வெளியே செல்பவர்களும் ஒரே நேரத்தில் அதிகளவில் குவிந்துள்ளதால், எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இந்நிலையில் இந்நிகழ்வில் பங்கேற்க வந்த ஒருவருக்கு அதிக கூட்ட நெரிசல் காரணமாக திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்குள்ள மருத்துவ முகாமில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்க அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு எடுக்கப்பட்டு, அங்குத் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் மயங்கிய நபரை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, ஆலயத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் அதிக அளவில் மக்கள் கூடியிருந்ததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாகத் தாமதம் ஏற்பட்ட நிலையில், மாற்று வழியில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொடியேற்ற விழா நடைபெற்று வரும் நிலையில், கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கொடியேற்ற விழாவில் குவிந்த பக்தர்கள் : ஒருவர் மயக்கம்!
PulseNews சுருக்கம்

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 54-வது ஆண்டு திருவிழா, இன்று (29.08.2026) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்காக ஆலயத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் பொதுமக்களும் பக்தர்களும் பெருமளவில் திரண்டனர்.

ஆலயத்திற்குள் வருபவர்களும் வெளியே செல்பவர்களும் ஒரே நேரத்தில் அதிகளவில் கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, விழாவில் பங்கேற்க வந்த பக்தர் ஒருவர் திடீரென மயக்கமடைந்தார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle