வரலாற்றில் முதல்முறை; ஆடி மாதம் முடிந்ததால் குவியும் ஜோடிகள்!
கேரள மாநிலம், திரிச்சூரில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்குத் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதே போல, இந்த கோயிலில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தில் பக்தர்கள் தங்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்குத் திருமணம் நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ஆடி மாதம் முடிய உள்ள நிலையில், வருகின்ற ஆவணி மாதத்தில் திருமணம் செய்ய முன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆவணி மாதம் தொடங்கி முதல் முகூர்த்தநாளான ஆகஸ்ட் 23 அன்று மட்டும் 377 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முன் பதிவு இன்னும் முடியாத நிலையில், இந்த திருமண முன் பதிவு எண்ணிக்கை 400 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, அடுத்த முகூர்த்தநாளான ஆகஸ்ட் 30 அன்றும் திருமணம் செய்ய முன் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேதியில் இதுவரை 295 திருமணங்கள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண முன் பதிவு அதிகரித்துள்ள நிலையில் விழாவை எந்த வித இடையூறும் இல்லாமல் சிறப்பாக முடிக்கக் கோயில் நிர்வாகம் பல்வேறு முன் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அதன்படி, திருமணத்தின் போது மணமகன், மணமகள் உட்பட உறவினர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் என மொத்தம் 24 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 4 மணிக்கே திருமண நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்ட உள்ளதாகவும், இதற்காக 6 கல்யாண மண்டபங்கள் தயார்ப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இந்த திருமணவிழாவையொட்டி கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்ட உள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோயிலில், இதற்கு முன்பாக ஒரே நாளில் அதிகபட்சமாக 334 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள 377 திருமணங்கள் இந்த கோயிலில் முதல் முறை என்று கூறப்படுகிறது

கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வழக்கமாக ஆடி மாதம் முடிந்த பிறகு, ஆவணி மாதத்தில் தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்குத் திருமணம் நடத்துவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதன்படி, தற்போது ஆடி மாதம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஆவணி மாதத்தில் திருமணங்களை நடத்த பக்தர்கள் அதிக அளவில் முன்பதிவு செய்து வருகின்றனர். வரலாற்றில் முதல்முறையாக, இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் திருமண முன்பதிவுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.