ஆதாரத்தோட மாட்டிக்கிச்சு... பாகிஸ்தானில் கிடைத்த சிவனின் ரகசிய முத்திரை; 1700 ஆண்டு உண்மையை உடைத்த இந்திய தொல்லியல் துறை
இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கல்வெட்டியல் பிரிவு, தொன்மை வாய்ந்த ஒரு வரலாற்றுச் சான்றை வெளிக் கொண்டு வந்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் பகுதியில் முத்திரை ஒன்றை கண்டு பிடித்துள்ளது. பிராமி எழுத்துடன் கூடிய இந்த சுடுமண் முத்திரை, சுமார் 1500 முதல் 1700 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறைந்த வரி; அதிக சம்பளம்... ஜீரோ கிரைம்: அமெரிக்காவில் வாழச் சிறந்த 'நம்பர் 1' மாநிலம் எது தெரியுமா? முத்திரையின் சிறப்பம்சங்கள் இந்த சுடுமண் முத்திரையின் மேல் பகுதியில் சிவபெருமானின் ஊர்தியான நந்தியும், திரிசூலமும் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. அதற்குப் கீழ் பிராமி எழுத்து வடிவில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அடர்ந்த தேவதாரு மரங்கள் நிறைந்த 'தேவதருவனம்' பகுதியில் அமைந்திருந்த 'சுவாமி கோட்டேஷ்வரர்' சிவன் கோயிலுக்கு இந்த முத்திரை அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை கல்வெட்டியல் பிரிவின் முதன்மை அதிகாரி கே. முனிரத்னம் ரெட்டி தெரிவித்துள்ளார். ஸ்கந்த புராணத்தின் வரலாற்றுச் சான்று ஸ்கந்த புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய நிகழ்வோடு இந்த முத்திரை நேரடியாகத் தொடர்புபடுத்தப்படுகிறது. சிவபெருமான் தேவதருவனக் காடுகளில் உலா வந்த புராணக் கதைக்குக் கிடைத்துள்ள மிக பழமையான எழுத்துப்பூர்வ மற்றும் சித்திரப் பூர்வ சான்றாக இது கருதப்படுகிறது. புராணங்களில் குறிப்பிடப்படும் 'தேவதருவனம்' என்பது தற்போதைய காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இமயமலைப் பகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்குள்ள தாருகாவன முனிவர்களின் அகந்தையைப் போக்க சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் உலாவந்ததாக ஆன்மிக கதைகள் கூறுகின்றன. பாகிஸ்தான் பகுதியில் கண்டறியப்பட்ட பிற தொல் பொருட்கள் இப்பகுதியில் இந்து மற்றும் பௌத்த பண்பாடுகள் இணைந்து செழித்திருந்ததை உணர்த்தும் வகையில், கடந்த காலங்களில் மேலும் சில முக்கிய சான்றுகள் கிடைத்துள்ளன கில்கிட் சமஸ்கிருத கல்வெட்டு (4-ஆம் நூற்றாண்டு) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட் பகுதியில் பிராமி எழுத்துக்களால் ஆன சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. அதில் 'புஷ்பசிங்' என்பவர் தனது ஆன்மிக குருவின் நினைவாக 'மகேஷ்வரலிங்கத்தை' நிறுவிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. பெஷாவர் சாரதா எழுத்துக் கல்வெட்டு (10-ஆம் நூற்றாண்டு) பெஷாவர் அருகிலுள்ள பாறைகளில் சாரதா எழுத்துமுறையில் பொறிக்கப்பட்ட சமஸ்கிருத வாசகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பௌத்த சமயத்தைச் சேர்ந்த 'தாரணி மந்திரங்கள்' பொறிக்கப்பட்டிருந்தன. இது அப்பகுதியில் நிலவிய மத நல்லிணக்கத்தையும், பண்பாட்டுச் செழுமையையும் பறைசாற்றுகிறது.

பாகிஸ்தான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவு பழமையான சுடுமண் முத்திரை ஒன்றைக் கண்டறிந்துள்ளது. பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள இந்த முத்திரை, சுமார் 1500 முதல் 1700 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்த முத்திரையின் மேற்பகுதியில் சிவபெருமானின் வாகனமான நந்தியின் உருவம் இடம்பெற்றுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சான்று, அந்தப் பகுதியில் பண்டைய காலத் தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.