PulseNews
லைஃப் ஸ்டைல்

ராங்கால்! அதிர வைத்த நயினார் ஓபன் டாக்!

"ஹ லோ தலைவரே, சுதந்திர தினத்தன்று உள்ளாட்சித் துறையில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்களுக்கு விருதுகளும் பண முடிப்புகளும் வழங்கப்படும். இந்த வருடமும் அதுபோல் விருதுகள் வழங்கப்பட்டிருக்கு.''” "சரிதான், இந்தமுறை அதில் ஒரு மாற்றம் நடந்ததைக் கவனிச்சியா?''” "ஆமாம் தலைவரே, பொதுவாக, சிறந்த மாநகராட்சிகளின் மேயர்கள், நகராட்சிகளின் தலைவர்கள், பேரூராட்சிகளின் தலைவர்கள் ஆகியோரை அழைத்து அவர்களிடம்தான் விருதுகள் வழங்கப்படும். ஆனால் விஜய் அரசில், இந்த துறையின் செயலாளர், இயக்குநர்கள், கமிஷனர்கள் போன்ற அதிகாரிகளை அழைத்து அவர்கள் கையில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. காரணம், உள்ளாட்சி அமைப்புகளில் மேயர்கள் மற்றும் தலைவர்களாக இருப்பவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு தனது கையால் விருது வழங்குவதில் முதல்வர் விஜய்க்கு விருப்பமில்லையாம். அதனால் நடைமுறையை புறந்தள்ளிவிட்டார். இதனை கேள்வி கேட்கவேண்டிய தி.மு.க., கொஞ்சம்கூட மூச்சுவிடவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம் என்கிறார்கள் தி.மு.க. ஆதரவு அதிகாரிகள்.''” நயினார் அட்டாக்! "மழை விட்டாலும் தூவானம் விடாத கதையா, அப்பா விவகாரத்தை நயினார் நாகேந்திரன் கையிலெடுத்து கமெண்ட் பண்ணியது பரபரப்பா மாறியிருக்கு போல?''” "ஆமாம் தலைவரே, தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அட்டாக் பண்ணும் விதத்தில், அப்பாவை எங்கே காணோம் என்று சட்டமன்றத்தில் நையாண்டி பண்ணினார் முதல்வர் விஜய். இதற்கு தி.மு.க. எதிர்வினையாற்றியது. பல கட்சிகளின் தலைவர்களும் விஜய்யை கண்டித்தனர். இந்த விவகாரம் அமுங்கிக் கிடந்த நிலையில், திடீரென பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந் திரன், விவகாரத்தை தூசிதட்டி விஜய்க்கு எதிராக அட்டாக் பண்ணினார். நயினாரின் இந்த அட்டாக், தி.மு.க.வினரை ஆறுதல்படுத்தி யிருக்கிறது. விஜய்யை அட்டாக் பண்ணினால் அது தி.மு.க.வுக்குத்தான் லாபம் என்கிற நிலையில் நயினார் ஏன் இப்படி பேசவேண்டும்? என்கிற கேள்வி தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைமையிடம் எதிரொலிக்க, பா.ஜ.க. தேசிய தலைமையின் க்ரீன் சிக்னல் இல்லாமல் தி.மு.க.வுக்கு ஆதரவாக நயினார் பேசியிருக்கமாட்டார். டெல்லியிலிருந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவின்படி நயினார் நடந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள். அதாவது, "தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி விரைவில் மலரலாம் அல்லது அடுத்த பிரதமர் வேட்பாளர் விஜய் என்ற பொருள்படும்படி அமைச்சர் ஆதவ்அர்ஜுனா சொன்னதன் விளைவாக, விஜய்க்கு எதிராக பா.ஜ.க. அரசியல் செய்யவேண்டி மேலிடம் உத்தரவிட்டிருக்கலாம்' என்கிறார்கள்.'' செல்ஃபி பஞ்சாயத்து! "முதல்வரின் உத்தரவையும் மீறி அரசு நிர்வாகத்தில் த.வெ.க. நிர்வாகிகள் தலையிடுவது தொடர்கிறதாமே?''” "திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்துள்ள தாளையூத்து கிராமத்தில் குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகிறது. ஊராட்சி சார்பில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் த.வெ.க. தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தனது ஆதரவாளர்களுடன், தாழையூத்து ஊராட்சி மன்ற அலுவல கத்திற்குச் சென்றார். அங்கு, நாற்காலியில் அமர்ந்தபடி, ஊராட்சி செயலர் தண்டபாணி யை நிற்கவைத்து குடிநீர் பிரச்சினை குறித்து கேட்டறிந்ததோடு, அலுவலகத்திலிருந்த கோப்புகளையும் மக்கள் பிரதிநிதிபோல் ஆய்வுசெய்தார். அப்போது, அவருடன் சென்ற ஆதரவாளர் ஒருவர் இதனை ‘செல்ஃபி’ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அரசு அலுவலகங்களில் த.வெ.க. நிர்வாகிகள் ஆய்வு நடத்தக்கூடாது என ஏற்கெனவே முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை மீறி த.வெ.க. நிர்வாகி ஆய்வு மேற்கொண்ட துடன், அதனை ‘செல்ஃபி’ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வு நடத்திய த.வெ.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக் கின்றனர் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர்.'' குற்றப் பின்னணியுடன் அரசு வழக்கறிஞர்! "ஏற்கெனவே அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு லஞ்ச விவகாரம் சூடா ஓடிக்கிட்டிருக்கும் நிலையில, கோவை மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞரின் மீது நிலுவையில் குற்ற வழக்கு இருக்கிறதா பேச்சு அடிபடுதே?''” "கோவை அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள டி.கார்த்திக் பிரபு மீது, கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு கோவை 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக் பிரபு வரும் செப்டம்பர் 02 அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டுமென கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கு நிலுவையிலுள்ள ஒருவர் அரசுப் பிரதிநிதியாக, நீதிமன்றங்களில் அரசின் சார்பில் வாதாடும் "அரசு வழக்கறிஞர்' பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது சட்ட, சமூக ஆர்வலர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.. குற்றச்சாட்டு சுமத்தப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது என்றபோதிலும், அரசு வழக்கறிஞர்கள் போன்ற மிகமுக்கியமான பொறுப்புகளுக்கு நபர்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் முந்தைய பின்னணி மற்றும் தகுதிகள் காவல்துறை மூலம் முறை யாகப் பரிசீலிக்கப்பட்டதா?'’எனக் கேள்வியெழுப்புகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் தகுந்த விளக்கமளிக்கப்படவேண்டும் அல்லது நியமனத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.'' கான்ட்ராக்ட் ஃபர்ஸ்ட்... டெண்டர் நெக்ஸ்ட்! "விஜய்யின் புதிய முதல்வர் அறை டெண்டரில் குளறுபடிகள் நடக்குதாமே?'' "முதல்வர் விஜய்யின் அறை, அலுவலகங்களை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது மாடிக்கு மாற்றியமைக்கும் பணிகள் ரகசியமாக நடக்கிறது என்று நக்கீரன்தான் முதன்முதலில் அம்பலப்படுத்தியது. மேலும், இந்த மாற்றங்களுக்காக 15 கோடி செலவிடப்பட உள்ளதாகவும், ஆனால், இதற்கு முறையாக டெண்டர் விடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தோம். உடனே 11 கோடி ரூபாய் ஒதுக்கி தற்போது டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணிக்கம் அண்ட் கோ கம்பெனிக்கு புதிய அலுவலகம் அமைக்கும் பணிகளையும், ஆடியோ வீடியோ நெட்வொர்க் அமைக்கும் கான்ட்ராக்டை பேன் டெலிகாம் எனும் கம்பெனிக்கு ஒதுக்கி வேலைகள் துரிதமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது 5 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிக்கிறார்கள். டெண்டர் அறிவித்து அதில் எல்-1 யார் வருகிறார்களோ அவர்களுக்கு ஒப்பந்தத்தை ஒதுக்கீடு செய்வதுதான் வெளிப்படையான டெண்டர் நடைமுறை விதிகள். ஆனால், இங்கு கான்ட்ராக்டை ஒருவருக்கு ஒதுக்கி பணிகளும் ஆரம்பித்துவிட்ட நிலையில், டெண்டர் அறிவிப்பை வெளியிடுவது டெண்டர் விதிகளுக்கு முரணானது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, தகுதியுள்ளவர்களுக்குத்தான் வேலை, தூய ஆட்சி என் றெல்லாம் சொல்லிக்கொள்ளும் விஜய் அரசின் நிர்வாக நேர்மை இதுதானா? என்று குற்றம் சாட்டுகிறார்கள் அரசு ஒப்பந்ததாரர்கள். சட்டமன்றம் நடந்துவரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் 10-வது மாடிக்கு உதயநிதி ஸ்டாலின் விசிட் அடித்து எல்லாம் முறையாகத்தான் நடக்கிறதா என கேள்வி யெழுப்பினாலே த.வெ.க. அரசு திக்குமுக்காடிவிடும். அதனால், 10-வது மாடிக்கு சென்று உதயநிதி ஆய்வுசெய்வாரா என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வினரிடம் மேலோங்கி வருகிறது.'' பேரை தூக்கு! "அறநிலையத்துறை சம் பந்தப்பட்ட விழாவில், அந்த துறை அமைச்சர் பேரே இடம் பெறலைன்னு த.வெ.க.வினரே முணுமுணுக்கிறாங்களே என்ன விவரம்?''” “"சுதந்திர தின விழா வினையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டது. இந்த பொதுவிருந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விழாவுக்கு அமைச்சர் நிர்மல்குமார் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அச்சடிக்கப்பட்ட பத்திரிகையில் விழாவில் அமைச்சர் நிர்மல்குமார், அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் ஆட்சியர்கள், மக்கள் பிரதிநிதிகள் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. ஆனால் துறை அமைச்சர் ரமேஷின் பெயர் ஏனோ தவிர்க்கப்பட்டிருந்தது. ‘இதுநாள் வரை நடந்த அத்தனை ஆட்சியிலும் துறைரீதியான அமைச்சர்கள் கலந்துகொள்வார்களோ இல்லையோ... அமைச்சர் பெயர் இடம்பெற்றி ருக்கும். ஆனால் இந்த நிகழ்வில் அறநிலையத்துறை அமைச்சரின் பெயர் இல்லை. கூடவே முதலமைச்சர் பெயரும் இல்லை. தென் மாவட்டத்தில் நான்தான் சி.எம். என்பதுபோல் நிர்மல்குமார் நடந்துகொண்டதை உள்ளூர் த.வெ.க.வினரே ரசிக்கவில்லையாம்.''’ பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்! "சுதந்திர தினத்தில் வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக, காங்கிரஸ் தலைவரான சோனியாகாந்தியை கண்டித்து பா.ஜ.க. கொந்தளிக்குதே என்ன விவரம்?''” "ஆமாம் தலைவரே, வந்தே மாதரம் பாடலின் நடுவே அதனை நடுவில் நிறுத்தச் சொன்னதாகக் கூறி நாடுமுழுக்க கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகிறது. பா.ஜ.க. மேலிடம். பா.ஜ.க.வின் வினோஜ் பி.செல்வம் தலைமையில் சோனியாவைக் கண்டித்து சென்னையில் தமிழக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் செய்தது. குறைந்தது 5,000 பேரை திரட்டி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டும் என பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தியிருந்த நிலையில், வினோஜ் பி.செல்வம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர். இது, பா.ஜ.க. தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.''” “"சரி, நானும் ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க... வாரணாசி விமான நிலையத்துல பயணிகளோட உடைமைகளைச் சோதனை போடும்போது, பயணி கொண்டுவந்த துப்பாக்கியை சோதனையிடுகையில் துப்பாக்கி வெடித்ததில் ஒரு பெண் பாதுகாப்புக் காவலர் உட்பட இருவர் குண்டுக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த துப்பாக்கிக் குண்டு வெடிப்பு தற்செயலானது. சோதனையின்போது எதிர்பாராமல் வெடித்துள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இந்தத் துப்பாக்கி மும்பையைச் சேர்ந்த கமலேஷ் கேதார்நாத் ராய் என்பவருக்குச் சொந்தமானது. இவர் தற்போது ஷிண்டே சிவசேனா பிரிவில் இருக்கிறார். பொதுவாக, பாது காப்புக்காக கொண்டு வரப்படும் துப்பாக்கியில் குண்டுகள் லோட் செய்யப்படாமல்தான் இருக்கவேண்டும். மாறாக, துப்பாக்கி லோட் செய்யப்பட்டிருந்தது எப்படி? சோதனை யின்போது குண்டு தற்செயலாகத்தான் வெடித்ததா? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்புகிறார்கள் எதிர்க் கட்சியினர்.''”

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ராங்கால்! அதிர வைத்த நயினார் ஓபன் டாக்!
PulseNews சுருக்கம்

சுதந்திர தினத்தன்று சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு விருதுகள் மற்றும் பணமுடிப்புகள் வழங்கும் வழக்கம் இந்த ஆண்டும் கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு நேரடியாக விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், விஜய் தலைமையிலான ஆட்சியில் இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த மாற்றம் குறித்து அவர் தனது கருத்தை அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle