வீட்டு பணிப்பெண்ணுக்கு இந்து மத முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்த கிறிஸ்தவ பங்குத்தந்தை.. மனிதமும், மதநல்லிணக்கமும்! | Kerala Christian priest
Kerala Christian priest : ஜேக்கப் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பங்குத்தந்தை என்றபோதிலும், இந்து மதத்தைச் சேர்ந்த பார்வதிக்கு அவரின் மத வழக்கப்படியே தனது வீட்டில் இறுதிச்சடங்குகளைச் செய்ய விரும்பினார்.
கேரளாவைச் சேர்ந்த ஜேக்கப் என்ற கிறிஸ்தவ பங்குத்தந்தை, தன்னிடம் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பார்வதியின் மறைவிற்குப் பிறகு நெகிழ்ச்சியான செயலைச் செய்துள்ளார். பார்வதி இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் மீதான மரியாதையின் காரணமாக அவரது மத முறைப்படியே தனது இல்லத்தில் இறுதிச் சடங்குகளை ஜேக்கப் முன்னின்று நடத்தினார்.
மதங்களைக் கடந்து மனிதநேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் போற்றும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்திருக்கிறது. ஒரு கிறிஸ்தவ மதகுருவாக இருந்தாலும், மாற்று மதத்தைச் சேர்ந்தவரின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து ஜேக்கப் மேற்கொண்ட இந்த முயற்சி பலரது பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.